இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத பெண்கள் உண்டா என்றால் என்ன நிச்சயம் இருப்பது மிக குறைவே. அதிலும் தென் இந்தியாவில் இது மிக அதிகம். ஏனெனில் தமிழ்நாட்டு பெண்களுக்கு அவ்வளவு பிரியம் தங்கத்தின் மீது.
நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்க ஆபரணம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டு தங்கம் விலையானது 25% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தில் முதலீடுகளை செய்து வருகின்றனர். இன்றைய நிலையில் தங்கம் விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே முதலீட்டாளர்கள் கூறி வருகின்றனர். ஆக தங்கம் விலையானது மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் ஆபரண விலை
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4,691 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 37,528 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு தினங்களாகவே சற்று ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வளவு அதிகரிப்பா?
கடந்த ஜனவரி மாதத்தில் கிராமுக்கு 3,732 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 29,856 ரூபாயாகவும் வர்த்தகமாகியது. இந்த நிலையில் நடப்பு மாதத்தில் அதிகபட்சமாக ஜூலை 9 அன்று கிராமுக்கு 4,718 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,744 ரூபாயாகவும் வர்த்தகமாகியுள்ளது. ஆக மொத்தத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் இந்த மாதம் வரையில் சுமார் 7,800 ரூபாய்க்கு மேல் சவரனுக்கு அதிகரித்துள்ளது.
தூய தங்கம் விலை
இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து 5,117 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 40,936 ரூபாயாகவும் விற்பனை, செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த இரண்டு தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று குறைந்து காணப்படுகிறது.
தூய தங்கம் விலை அதிகரிப்பு
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் தூய தங்கமானது குறைந்தபட்சமாக 4,072 ரூபாயாகவும், இது சவரனுக்கு 32,576 ரூபாயாகவும் இது வர்த்தகமாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை 9 அன்று கிராமுக்கு 5,146 ரூபாயாகவும் சவரனுக்கு 41,168 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் கடந்த ஜனவரியில் இருந்து சவரனுக்கு 8,592 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆபரண ஆபரண வெள்ளி
இன்று கிராம் வெள்ளியின் விலையானது 52.12 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 90 ரூபாய் குறைந்து 52,120 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரியில் குறைந்தபட்சமாக 48,900 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலையானது, கடந்த ஜூலை 9ம் அன்று அதிகபட்சமாக 51,900 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையானது இந்த இடைப்பட்ட இடைவெளியில் கிலோவுக்கு 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications