தங்கம் விலை டாலரின் மதிப்பானது உச்சத்தினை எட்டிய நிலையில், கடந்த அமர்விலேயே சரிவில் காணப்பட்டது. இந்த சரிவானது இன்றும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
டாலரின் மதிப்பு மட்டும் அல்ல, பத்திர சந்தையும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், மேற்கொண்டு தங்கத்தின் விலை அழுத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் சீனாவில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. அதேசமயம் இது விடுமுறை காலம் என்பதால் தங்கத்தின் தேவையானது சர்வதேச அளவில் குறையலாம் என்ற உணர்வும் உள்ளது.
தங்கம் விலை எப்படியிருக்கும்?
இதற்கிடையில் தங்கம் விலையானது 1790 - 1830 டாலர்களுக்குள் இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த செப்டம்பர் மாத சரிவில் இருந்து தங்கம் விலையானது 200 டாலர்களுக்கு மேலாக அதிகரித்துள்ளது. இது இனியும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்காவின் மத்திய வங்கியானது, தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், இது மேற்கொண்டு ரெசசன் அச்சத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் நிலை
தொடர்ந்து சீனாவில் கொரோனா பரவலானது அதிகரித்து வரும் நிலையில், இது வரும் வாரங்களில் எப்படி இருக்குமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்று எப்படியிருக்கும்?
மேலும் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் மத்தியில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. எப்படியிருப்பினும் அமெரிக்காவின் வேலையின்மை நலன், டாலர் மதிப்பு, பத்திர சந்தை என பலவும், இன்று சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலையில் சற்றே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1814.90 டாலராக குறைந்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாக காணப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 23.830 டாலராக குறைந்து காணப்படுகிறது. இது சற்று கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு இன்று சற்று குறையலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாக காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 54,772 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது தற்போது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 44 ரூபாய் குறைந்து, 68,969 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக ஆபரண தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5095 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 40,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5558 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு, 110 ரூபாய் குறைந்து, 55,580 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது கிராமுக்கு 74.60 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 74,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?



Click it and Unblock the Notifications