ஜொலி ஜொலிக்கும் தங்கம் என்றாலே இன்றைய காலகட்டத்தில் மிக விரும்பப்படும், ஒரு விலையுயர்ந்த ஆபரணமாக பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையானது எவ்வளவு தான் அதிகரித்தாலும், கடைகளில் குவியும் கூட்டமே சாட்சி சொல்லும், நம் மக்கள் தங்கத்தின் மீது எவ்வளவு தீரா மோகம் கொண்டுள்ளனர் என்பதை.
அதிலும் லாக்டவுன் காலகட்டத்தில் கூட ஆன்லைனில் நம் மக்கள் ஆர்டர் செய்தது மறுக்க முடியா ஒரு விஷயமே.
முக்கிய பங்கு வகிக்கும் தங்கம்
ஒரு புறம் சிறந்த ஆபரணமாக மட்டும் அல்லாமல், அந்தஸ்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகவும் மாறிப் போயுள்ளது. அதோடு பிறந்த குழந்தை முதல் வயதான பாட்டி வரை, இனப்பாகுபாடின்றி அனைவருக்கும் அணிவிக்கும் ஒரு விலையுயர்ந்த உலோகம் என்றால் அது தங்கம் தான்.
இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை
கடந்த இரண்டு தினங்களாகவே சற்று ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்துள்ளது. இன்று சென்னையில் கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து, 4,670 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து, 37,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதிலும் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் தூய தங்கம் விலை
தூய தங்கத்தினை பொறுத்த வரையில் சென்னையில் இன்று கிராமுக்கு 78 ரூபாய் குறைந்து, 5,095 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 780 ரூபாய் குறைந்து 50,950 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆபரண தங்கத்தின் விலையை விட, தூய தங்கத்தின் விலையானது இருமடங்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையினை பொறுத்த வரையில் கிராமுக்கு பெரியளவில் மாற்றமின்றி 0.75 ரூபாய் குறைந்து, 62 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே கிலோவுக்கு 750 ரூபாய் மட்டும் குறைந்து, 62,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வரவிருக்கும் பண்டிகை காலங்களில் ஆபரண வெள்ளியின் தேவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி சரிவு
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் முதல் பாதியில் தங்கம் இறக்குமதியானது 57% குறைந்து, அதன் மதிப்பு 50,658 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 1,10,259 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வெள்ளி இறக்குமதியானது கடந்த ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 63.4% குறைந்து 5,543 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
தங்கத்திற்கு சாதகமான காரணிகள்
கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற நிலையே இருந்து வருகிறது. மேலும் அமெரிக்கா - சீனாவிடையே நிகழ்ந்து வரும் வர்த்தகபோர், வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், கொரோனா தடுப்பூசி, என பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. இதற்கிடையில் இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில், இன்னும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு கிராமப்புறங்களில் பருவ மழையும் சரியான நேரத்தில் பெய்துள்ளதால் உற்பத்தி அதிகரிக்கும் என்றும், இதனால் மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம்
நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கப்படலாம், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்கத்திற்கான விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரம் தான்.
நிபுணர்களின் கணிப்பு
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிந்து வரும் நிலையில், வரவிருக்கும் நவம்பர் மாத இறுதிக்குள் 10 கிராம் தங்கம் விலையானது இந்திய சந்தையில் 52,000 தொடலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போது இந்த விலை 50,600 ரூபாய் என்ற நிலையில் உள்ளது. இதே தங்கத்திற்கான அடுத்த சப்போர்ட் லெவல் 50,400. 50,200 ரூபாய் என்ற விலைக்குள் இருக்கலாம் என்றும் ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications