நடப்பு மாதம் தொடங்கி மூன்று நாட்களே ஆகியுள்ள நிலையில், இன்றோடு மூன்று நாட்களாக தங்க ஆபரணத்தின் விலையானது சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவினைக் கண்டு வருகிறது.
குறிப்பாக இந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,078 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இது நகை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த இரண்டு தினங்களாக, சர்வதேச சந்தை மற்றும் இந்திய காமடிட்டி வர்த்தகத்திலும் விலை சரிவில் இருந்தது. ஆனால் இன்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. எனினும் ஆபரண தங்கத்தின் விலையானது மூன்றாவது நாளாக சரிவிலேயே காணப்படுகிறது.

முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
இது தங்கம் வாங்க நினைபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று கூறி வரும் நிலையில், கடந்த இரண்டு வார காலமாகவே தங்கம் விலையானது சற்று சரிந்து வருவது, முதலீட்டாளர்களிடையே நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச தங்கம் நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து அவ்வப்போது சற்று ஏற்றம் கண்டாலும், தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 2.30 டாலர்கள் அதிகரித்து, 1835.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. மேலும் கடந்த அமர்வின்போது முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் பெரியளவில் மாற்றமில்லாமல் தான் காணப்படுகிறது.

சர்வதேச வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது இன்று 1.44% ஏற்றத்தில் காணப்படுகிறது. நேற்று பலமான சரிவினைக் கண்ட நிலையில், இன்று தொடக்கத்திலேயே வெள்ளியின் விலையானது சற்று ஏற்றம் கண்டு காணப்பட்டது. தற்போது 26.817 டாலர்களாக காணப்படுகிறது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரங்களாக சரிவினைக் கண்டு வரும் வெள்ளி விலையானது, இன்றும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் வெள்ளியின் விலை குறையும் விதமாக காணப்படுவதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி இருக்கும் நிலையில், இந்திய சந்தையில் பிப்ரவரி காண்டிரக்ட் இன்னும் சில தினங்களில் எக்ஸ்பெய்ரி என்பதால் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. ஏப்ரல் மாத காண்டிரக்ட் விலை 71 ரூபாய் அதிகரித்து, 47,896 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,825 ரூபாயாகவும், இன்று காலை தொடக்கத்தில் 48,015 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, இன்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 817 ரூபாய் அதிகரித்து, 68,358 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 67,541 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 68,048 ரூபாயாக காணப்படுகிறது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று மூன்றாவது நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இன்று கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து 4,529 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து 36,232 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டதையடுத்து கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு கிட்டதட்ட 1078 ரூபாய் குறைந்துள்ளது.

சுத்த தங்கம் விலை
இதே 24 கிராம் தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 4,940 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 320 ரூபாய் குறைந்து 49,400 ரூபாயாகவும் உள்ளது. தூய தங்கத்தின் விலையும் கடந்த மூன்று நாட்களில் மட்டும், 10 கிராமுக்கு 1380 ரூபாய் குறைந்துள்ளது.

ஆபரண வெள்ளி விலை
இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 2.10 ரூபாய் குறைந்து, 73.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 2,100 ரூபாய் குறைந்து 73,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 6,000 ரூபாய் குறைந்துள்ளது.

இன்றுஎன்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்ம் முதலீட்டாளார்கள் சற்று பொறுத்திருந்து தங்கத்தினை வாங்கலாம். குறிப்பாக இன்ட்டிரா டே வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் குறைந்த விலையானது முதலீட்டாளர்களை வாங்க தூண்டும் என்பதால் வாங்கி வைக்கலாம்.