3வது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையினை பொறுத்தவரையில் இன்று சற்று குழப்பமான நிலையிலேயே காணப்படுகிறது. ஏனெனில் சர்வதேச சந்தையில் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது சற்று ஏற்றமும் கண்டு வருகிறது.

 

இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் சற்று ஏற்றத்துடனே காணப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் டாலரின் மதிப்பு எனலாம். அதோடு எந்த வர்த்தக ஒப்பந்தம் பற்றிய ஆய்வுக் கூட்டத்தினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வேண்டாம் என நிராகரித்தாரோ? அந்த ஆய்வுக் கூட்டம் பற்றிய உறுதி பாட்டினை பற்றி சீனா அதிகாரிகள் கூறியதாக செயதிகள் வெளியாகியுள்ளன.

முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை

முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை

ஆக இந்த ஆய்வுக் கூட்டமானது நடக்குமா? இல்லையா? முதல் கட்ட ஒப்பந்தம் ஆய்வு செய்யப்படுமா? இதே போல நீட்டிக்கப்படுமா? அல்லது ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக தங்கம் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகிறது. ஏனெனில் ஒரு வேளை திட்டமிட்டபடி அமெரிக்கா சீனா இடையேயான இந்த கூட்டம் சரிவர நடந்தால், இந்த இரு நாடுகளின் வர்த்தகம் மேம்படும். இது மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் காரணிகளில் ஒன்றாகவும் அமையும்.

 டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

எனினும் உலகளாவிய அளவில் பொருளாதார மீட்சி குறித்தான கவலைகளும் ஒரு புறம் இருந்து வருகின்றன. எனினும் அமெரிக்கா சீனா பேச்சு வார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றம் டாலரின் மதிப்பினை வலுவானதாக மாற்றக்கூடும். தற்போது மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு 93.108 ஆக வலுவடைந்து காணப்படுகிறது.

தடுப்பூசி பற்றிய நம்பிக்கை
 

தடுப்பூசி பற்றிய நம்பிக்கை

கொரோனா வைரஸ் குறித்தான நம்பிக்கையானது, தங்கம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களின் தேவையை எடை போடும் விதமான உள்ளது. ஏனெனில் சர்வதேச அளவில் பரவி வரும் கொரோனா தாக்கத்தின் பாதிப்பினை தடுக்க இதுவரை சரியான மருந்துகள் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் தற்போது ஆய்வில் உள்ள மருந்துகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என்ற உணர்வும் இருந்து வருகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.

 ஃபெடரல் வங்கி கூட்டம்

ஃபெடரல் வங்கி கூட்டம்

இதற்கிடையில் வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள அமெரிக்கா மத்திய வங்கியில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் ஜியோஜித் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்த கூட்டத்தில் மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், பணவீக்கத்தினை சீரமைப்பதிலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம்.

 நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள்

நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள்

எப்படி எனினும் தங்கத்தின் விலையானது சரிந்து வந்தால், நிச்சயம் முதலீடு செய்யப்பட அது நல்ல வாய்ப்பு எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக நாளை நடக்கவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நிச்சயம் இந்த குழப்பமான நிலை இப்போதைக்கு மாறப்போவதில்லை என்ற எண்ணமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆக தங்கம் விலை குறைந்தால், நிச்சயம் முதலீடு என்பது அதிகரிக்கும். இது தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வழிவகுக்கும்.

நாளை என்னவாகும்?

நாளை என்னவாகும்?

அப்படியே நாளை எதிர்பார்ப்பது போல ஊக்குவிப்பு தொகைகள் அறிவிக்கப்படாலும் கூட, அதிகப்படியான விலையேற்றத்தினை இது தடுக்கலாம். ஆனால் நிச்சயம் விலை மீண்டும் அதிகரிக்கும் என்கிறார்கள் கமாடிட்டி சந்தை நிபுணர்கள். எனினும் நாளை கூட்டத்தில் என்ன அறிவிப்புகள் வருமோ என்ற குழப்பத்திலேயே தான் இன்றைய சந்தை உள்ளது.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது 1.35 வாக்கில் சற்று சரிவில் இருந்த நிலையில், தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4.60 டாலர்கள் குறைந்து, 1927.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் இருந்தே சரிவில் இருந்த தங்கம் விலையானது சற்று ஏற்றம் கண்டு காணப்படுகிறது. தொடர்ச்சியான நான்காவது நாளாக சரிவில் தொடங்கிய சந்தையானது, இன்று முடிவில் எப்படி இருக்குமோ என்ற பெருத்த எதிர்பார்ப்பினையும் உருவாக்கியுள்ளது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தையில் சற்று ஏற்றத்துடனே காணப்படுகிறது. தற்போது 0.44% ஏற்றத்தில் உள்ளது. இது 0.212 டாலர்கள் அதிகரித்து 26.485 டாலர்களாகவே காணப்படுகிறது. தங்கம் விலையினை விட வெள்ளியின் விலையானது சற்று வலுவான நிலையிலேயே காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் தொடர்ச்சியாக நான்கு நாள் சரிவில் இருந்த நிலையில், இன்று தற்போது சற்று ஏற்றத்துடன் உள்ளது.

Mcx தங்கம் விலை

Mcx தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இன்று காலையில் சற்று சரிவில் இருந்த நிலையில், தற்போது கிலோவுக்கு 368 ரூபாய் அதிகரித்து. 64,375 ரூபாயாக காணப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாகவே சரிவில் இருந்த வெள்ளியின் விலையானது, இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.

Mcx வெள்ளி விலை

Mcx வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்லியின் விலையானது தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இன்று காலையில் சற்று சரிவில் இருந்த நிலையில், தற்போது கிலோவுக்கு 368 ரூபாய் அதிகரித்து. 64,375 ரூபாயாக காணப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாகவே சரிவில் இருந்த வெள்ளியின் விலையானது, இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் வகையில் சற்று குறைந்துள்ளது. தற்போது 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து, 4919 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து 39,352 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து, 5,366 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து, 42,928 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றோடு மொத்தம் தொடர்ச்சியாக மூன்று தினங்களாகவே தங்கம் விலையானது குறைந்து, தங்கம் வாங்குபவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையினை பொறுத்தவரையில் பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்று சென்னையில் கிராமுக்கு 65.55 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 655.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 50 ரூபாய் அதிகரித்து 65,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களாகவே பெரும் சரிவினைக் கண்ட ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold jewellery prices fall for 3th consecutive day in Chennai

Gold price update.. Gold jewellery prices fall for 3th consecutive day in Chennai, also MCX and comex gold prices are trade up and down in today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X