செம சரிவில் தங்கம் விலை.. 5 நாளாக தொடர் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றோடு ஐந்தாவது நாளாக தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு என்பது, தங்கம் வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதிலும் இன்று சர்வதேச சந்தையில் மற்றும் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் பட்ஜெட் அறிவிப்பின் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் வீழ்ச்சியினை கண்டுள்ளது.

இது உண்மையில் தங்க ஆர்வலர்களுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு தான். ஏனெனில் தொடர்ச்சியாக கடைசி ஐந்து நாட்களாகவே தங்கம் விலையானது, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.

என்னென்ன பார்க்க போகிறோம்?

என்னென்ன பார்க்க போகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய காமடிட்டி வர்த்தகத்தில் விலை என்ன? தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணத்தின் விலை நிலவரம் என்ன? சாதகமான பாதகமான காரணிகள் என்னென்ன? இனியும் குறையுமா? இனி விலை எப்படி இருக்கும்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். இந்த இடத்தில் நீண்டகால நோக்கில் வாங்கலாமா? அடுத்த முக்கிய லெவகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த நான்கு நாளாகவே தங்கம் விலையானது வீழ்ச்சியினை கண்டு வந்த நிலையில், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 16.65 டாலர்கள் குறைந்து, 1807.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இது தங்கம் விலை ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது இன்று கிட்டதட்ட 2% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 1.72% அதிகரித்து 26.680 டாலர்களாக அதிகரித்து காணப்படுகிறது. தினசரி கேண்டில் பேட்டர்னில் வெள்ளியின் விலை, நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் பேட்டர்ன் சற்று சரியும் விதமாகவே உள்ளது. எனினும் திங்கட்கிழமையன்று மீண்டும், சந்தை எப்படி தொடங்குகிறது என்பதனை பொறுத்தே மாறும். இதனால் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் பலமான ஏற்றத்தில் காணப்படுகிறது. இன்று பிப்ரவரி காண்டிரக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், ஏப்ரல் மாத காண்டிரக்ட் விலையானது 10 கிராமுக்கு 365 ரூபாய் அதிகரித்து, 47,080 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று காலை தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் கானப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 1117 ரூபாய் அதிகரித்து, 67,928 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் 67,210 ரூபாயாக தொடங்கியுள்ளது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று 5-வது நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து 4,441 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து 35,528 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து, இன்றோடு கடந்த ஐந்தாவது நாளாகவே தங்கம் விலை குறைந்து வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே 24 கிராம் தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, 4,845 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 450 ரூபாய் குறைந்து 48,450 ரூபாயாகவும் உள்ளது. தூய தங்கத்தின் விலையும் கடந்த 5 தினங்களாக சரிந்து வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 0.20 பைசா குறைந்து, 72 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 200 ரூபாய் குறைந்து 72,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் இன்றோடு நான்காவது நாளாக குறைந்துள்ளது.

பட்ஜெட் எதிரொலி

பட்ஜெட் எதிரொலி

பட்ஜெட் 2021ல் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை இன்றோடு கடந்த 5 நாட்களாக குறைந்து வருகின்றது. வெள்ளியின் விலையானது இன்றோடு நான்கு நாட்களாக குறைந்து வருகின்றது. இந்தியாவில் இனி தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலையானது அதிகரிக்கும். ஆக இது தங்கம் வாங்க சரியான இடன் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்காவில் தொடர்ந்து பத்திர லாபம் அதிகரித்து வரும் நிலையில், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தின் மீதுள்ள ஈர்ப்பினை குறைத்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பும் வலுவடைந்து வருகின்றது. இதன் காரணமாக பங்கு சந்தைகளும் உச்சம் தொட்டு வருகின்றன. இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகிறது.

முக்கிய சப்போர்ட் விகிதம்

முக்கிய சப்போர்ட் விகிதம்

தங்கம் விலையில் முக்கிய சப்போர்ட் விகிதமாக 1800 கருதப்பட்டு வந்தது. ஆனால் அதனையும் உடைத்து காட்டியுள்ளது. இனி 1764 டாலர்களை உடைத்து சென்றால் தங்கம் விலையானது இன்னும் குறையலாம். எனினும் மீடியம் டெர்மில் குறைவான விலையான முதலீட்டாளார்களை வாங்க தூண்டும் என்பதால், தங்கம் விலை சற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதே தற்போதைய நிலையில் 1880 டாலர்களை உடைத்தால் சற்று ஏற்றம் காணலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதே எம்சிஎக்ஸ் சந்தையில் ரெசிஸ்டன்ஸ் லெவல் 48,150 ரூபாயாகவும், இதே சப்போர்ட் விகிதம் 45,750 ரூபாயாகவும் உள்ளது.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

அமெரிக்காவில் ஊக்கத்தொகை பற்றிய எதிர்ப்பார்ப்புகள், முதலீட்டாளர்கள் மத்த்யில் நிலவி வருகின்றது. ஏனெனில் இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு முக்கிய சப்போர்ட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்க முதலீட்டாளர்கள் அமெரிக்க ஊக்கத்தொகையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்ம் முதலீட்டாளார்கள் திங்கட்கிழமையன்று வர்த்தகத்தினை பொறுத்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது. இதுவே ஆபரண தங்கம் விலையும் தொடர்ந்து ஐந்து நாட்களாக சரிந்து வருவதால், இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் குறைந்த விலையானது முதலீட்டாளர்களை வாங்க தூண்டும் என்பதால் இது விலை அதிகரிக்க வழிவகுக்கும். .

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold jewellery prices fall for fifth day in a row

Gold price update.. gold jewellery prices fall for fifth day in a row
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X