சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க நல்ல வாய்ப்பு தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் அவ்வப்போது ஏற்றம் கண்டு காணப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது.

அதிலும் கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் மாற்றமில்லாமல் ஒரு rangebound ஆகவே வர்த்தகமாகிக் கொண்டும் வருகிறது.

நிபுணர்கள் கணித்ததை போல இன்று வரையில் 1760 டாலர்களை கடந்த சில வாரங்களாகவே உடைத்தபாடாக இல்லை. ஆக தங்கம் விலையானது இன்னும் அழுத்தத்தில் உள்ளதையே பார்க்க முடிகிறது.

பிசிகல் தங்கத்தின் தேவை

பிசிகல் தங்கத்தின் தேவை

இந்திய சந்தையில் தொடர்ந்து பிசிகல் தங்கத்தின் தேவையானது இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் விலை சற்று குறைந்தாலும், அது அவ்வளவாக ஆபரணத் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கவில்லை எனலாம். ஏனெனில் இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தினை தங்கள் உணர்வுகளோடு கலந்துள்ள உலோகமாக பார்க்கின்றனர். எனினும் பரவி வரும் இரண்டாம் கட்ட பரவலானது, தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

கடந்த வாரத்தில் காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இரு சந்தைகளிலும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது ஏற்றம் கண்டு இருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது அவ்வப்போது சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டாலும், மொத்தத்தில் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1733.70 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 1747 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று 1718.80 டாலர்களை தொட்ட நிலையில், முடிவில் 1731.30 டாலர்களாக முடிவுற்றது.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், வெள்ளியின் விலையானது பலத்த சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 26.337 டாலர்களாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று 24.435 டாலர்கள் வரையிலும் சென்றது. இதே எனினும் வெள்ளிக்கிழமையன்று 25.110 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையானது நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, ஏற்ற இறக்கத்திலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 44,974 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 45,050 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 44,441 ரூபாயினை தொட்டது. இது உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலை, கடந்த வாரத்தில் 533 ரூபாய் குறைந்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 11,750 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், ஒரு நாள் மட்டும் சற்று ஏற்றம் கண்ட நிலையில், , நான்கு நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 67,000 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றைய அதிகபட்சமான விலையும் 67,000 ரூபாயாகவே இருந்தது. எனினும் வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 63,411 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவு விலையானது கிலோவுக்கு 64,805 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தில் மட்டும் 2,190 ரூபாய்க்கும் மேலாக சரிந்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 12,800 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 5 நாட்கள் ஏற்றத்திலும், இரண்டு நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. எனினும் அதிலும் பெரிய மாற்றம் என்பது இல்லை. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 33,696 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. பெரியளவில் மாற்றமில்லாமல் இன்று கிராமுக்கு 4233 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 33,864 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 9,904 ரூபாய் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் பெரியவில் மாற்றம் காணவில்லை. இரண்டு நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 46,120 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 42,330 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 69.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 693 ரூபாயாகவும், கிலோவுக்கு 69,300 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 70,000 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 69,300 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்துள்ளது.

பத்திர லாபம் அதிகரிப்பு

பத்திர லாபம் அதிகரிப்பு

தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், அதிகரித்து வரும், அமெரிக்க பத்திர சந்தையினால், டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து காணப்பட்டது. இதனால் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் அழுத்தத்தில் காணப்பட்டது. இது வரும் வாரத்திலும் சற்று அழுத்தத்தினை கொடுக்கலாம் என்றாலும், நாளை தொடக்கத்தினை பொறுத்தே வாங்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கலாம் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

எனினும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், கடந்த சில நாட்களாக பத்திர சந்தையில் லாபத்தின் உச்சயில் உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்தால், அது குறையலாம். இதனால் முதலீடுகள் வெளியேறக்கூடும். இதனால் பத்திர சந்தையானது சரிவினைக் காணலாம். இதனால் டாலரின் மதிப்பும் சற்று அழுத்தத்தினை காணலாம். இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கக் கூடும். இது தங்கம் விலையில் நேர்மறையாக தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

சர்வதேச அளவில் ஏற்றம் கண்டு வரும் பங்கு சந்தைகள், பத்திர சந்தைகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் காணப்பட்ட நிலையில், குறையும் பத்திர லாபம் காரணமாக இதில் சற்று முதலீடுகள் குறையலாமோ என்ற நிலையும் நிலவி வருகின்றது. ஆக இது பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தடைகள் வருமோ?

புதிய தடைகள் வருமோ?

இந்தியாவில் மேற்கொண்டு பரவி வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, புதிய தடைகள், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம், என்ற கவலையும் நீட்டித்து வருகின்றது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான ஆர்வம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் நகை விற்பனையாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஏனெனில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், கடைகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

எனினும் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும் சந்தையின் போக்கினை தீர்மானிக்கலாம். பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில் நாளை தொடக்கத்தினை பொறுத்தி தீர்மானிக்கலாம். எனினும் நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து தீர்மானிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold jewellery prices fall Rs.9,900 above from record high

Gold weekly updates.. Gold jewellery prices fall Rs.9,900 above from record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X