இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. மூன்றாவது நாளாக சரியும் ஆபரண விலை.. 3 நாளில் ரூ.2,944 குறைவு..!

கொரோனா வைரஸ் தாக்கத்தை விடுங்க பாஸ்.. அதனை விட முதலீட்டாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியினை கொடுத்துள்ளது தங்கம் விலை. இன்றோடு சவரனுக்கு மூன்றே நாளில் 2,944 ரூபாய் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற பதற்றமான நிலையில், முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை தங்கத்தில் செய்து வருகின்றனர்.

இதனால் கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுக் கொண்டே வந்தது. இதன் காரணமாக தங்க ஆபரணத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போனது. போகிற போக்கில் சாமானியர்கள் தங்கத்தினை நினைத்து பார்க்க முடியுமா? இல்லையா என்று கருத்துக்கள் கூட நிலவி வந்தன.

தங்கம் விலை மூன்று நாட்களாக சரிவு

தங்கம் விலை மூன்று நாட்களாக சரிவு

ஆனால் சாமானியர்கள் வயிற்றில் பால் வார்ப்பது போல தங்கம் விலையானது இன்றோடு கடந்த மூன்று தினங்களாகவே சரிந்து வருகிறது. அதுவும் கொஞ்சம், நஞ்சமல்ல, சவரனுக்கு 2,944 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று சவரனுக்கு 184 ரூபாய் குறைந்தும், இதே செவ்வாய் கிழமையன்று 352 ரூபாயும், இதே இன்று சவரனுக்கு 2,408 ரூபாயும் குறைந்து, ஆக மொத்தத்தில் மூன்று நாளில் 2,944 ரூபாய் குறைந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்

இன்றைய விலை நிலவரம்

சென்னையில் இன்று தங்கம் விலையானது (22 கேரட்) கிராமுக்கு 301 ரூபாய் குறைந்து 5,013 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,104 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த நான்கு தினங்களாகவே சரிந்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலையும் குறைந்து வருகிறது.

தூய தங்கம் விலை நிலவரம்

தூய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது (24 கேரட்) கிராமுக்கு 335 ரூபாய் குறைந்து, 5,468 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 3,350 ரூபாய் குறைந்து 54,680 ரூபாயாகவும் விற்பனை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜூலை மாத விலை நிலவரம்

ஜூலை மாத விலை நிலவரம்

ஜூலை மாதத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்திருந்த நிலையில், ஒட்டுமொத்த விலையின் படி பார்த்தால் ஜூலை மாதத்தில் 22 கேரட் தங்கத்தின் விலையானது 8.92% ஏற்றம் கண்டுள்ளது. இதே 24 கேரட் தங்கம் விலையானது 8.74% ஏற்றத்தில் உள்ளது. அதிகபட்ச விலையானது ஜூலை மாதத்தில் சவரனுக்கு 41,520 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சம் 37,160 ரூபாயாகவும் விற்பனை செய்யட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத நிலவரம்

ஆகஸ்ட் மாத நிலவரம்

நடப்பு ஆகஸ்ட் மாதத்தினை பொறுத்த வரையில், இதுவரையில் 22 கேரட் தங்கம் விலையானது அதிகபட்சமாக சவரனுக்கு 43,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே குறைந்தபட்சம் சவரனுக்கு 40,104 ரூபாயாகவும் இன்று குறைந்தும் காணப்பட்டுள்ளது.

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியினை பொருத்தவரையில் செவ்வாய்கிழமையன்று குறைந்து இருந்தாலும், இன்று குறையவில்லை, மாறாக இன்று விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இன்று சென்னையில் கிராமுக்கு 72.55 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 72,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+