gold price Today: தங்கம் விலையானது இன்றும் இரண்டாவது நாளாக சற்று குறைந்து காணப்படுகின்றது. இது சர்வதேச சந்தையில் சற்று அதிகரித்திருந்தாலும், ஆபரண தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது.
பணவீக்கம் குறித்தான தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், இது மீண்டும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், இன்று சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது.
தொடர்ந்து வலுவாக காணப்பட்ட டாலரின் மதிப்பு 0.1% சற்றே சரிந்து காணப்படுகின்றது. இது இன்னும் சரியுமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
வட்டி அதிகரிப்பு தொடரலாம்
பெடரல் ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து அதன் வட்டி அதிகரிப்பினை தொடரலாம் என்ற அச்சமே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது வரவிருக்கும் பணவீக்க தரவினை பொறுத்து ஏற்றமா? அல்லது இறக்கமா? என்பது இருக்கலாம்.
முதலீடுகள் குறையலாம்
பணவீக்கம் என்பது தற்போது மென்மையடைய தொடங்கியிருந்தாலும், மேற்கோண்டு அதனை குறைக்கும் விதமாக, வட்டி அதிகரிப்பு என்பது இருக்கலாம். இது மத்திய வங்கியின் இலக்கினை அடையும் வரையில் தொடரலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
அமெரிக்காவில் ரெசசன் வரலாமோ என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், தற்போது ரெசசனுக்குள் அமெரிக்கா நுழையாது. சீனாவும் தன்னுடைய கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இது மேற்கொண்டு தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பாதுகாப்பு புகலிடமாகவும், தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 5.25 டாலர்கள் அதிகரித்து, 1868.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 0.69% அதிகரித்து, 22.003 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 161 ரூபாய் அதிகரித்து, 56,687 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 306 ரூபாய் அதிகரித்து, 66,450 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 5330 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 42,640 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 5814 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து, 58,140 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 72.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 72,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications