மண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்படாதவர் உண்டா என்றால் நிச்சயம் இல்லை. பிறந்த குழந்தை முதல் திருமணமாகும் பெண்கள், வயதான பாட்டிகள் வரை விரும்பி அணியக் கூடிய ஒரு உலோகம் தான் தங்கம்.
டிசம்பர் மாதம் தொடங்கி ஐந்து நாட்களே ஆன நிலையில், 22 கிராம் தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதோடு, சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டுள்ளது.
தங்கத்தில் விலையில் மாற்றம்
எனினும் விரைவில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தக போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையே சாதகமான ஒப்பந்தம் ஏற்படும்போது, சர்வதேச சந்தையில் தங்கத்தில் பெரிய மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா சீனா வர்த்தகப் போர்
சர்வதேச சந்தையில் சீனா அமெரிக்கா பேச்சு வார்த்தை சாதகமான நிலையில் இருந்த போதிலும், வேலை வாய்ப்பு குறித்தான தரவுகள் எதிர்பார்த்ததை விட பலவீனமான நிலையில் உள்ளன. இதனால் பலவீனமான அமெரிக்கா டாலருக்கு இடையே அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,479.37 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
டிரம்ப்பின் பேச்சு சாதகமாக உள்ளது
இந்த நிலையில் கடந்த புதன் கிழமையன்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வர்த்தக ஒப்பந்தம் குறித்து மிகவும் சாதகமாக பேசினார். மேலும் சீனாவுடனான ஒப்பந்தம் குறித்தான பேச்சு வார்த்தைகள் மிகவும் சாதகமாக போய்க் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார். எனினும் இவரின் முந்தைய அறிக்கைகளில் வர்த்தக ஒப்பந்தமானது, அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தான் வர்த்தக ஒப்பந்தம் போடப்படலாம் என்றும் கூறியது.
முதலீட்டாளர்கள் தொடர்ந்து கண்கானிப்பு
மேலும் டொனால்டி டிரம்ப் 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரான்ஸ் பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரியை விதிக்கலாம் என்றும் அச்சுறுத்தி வந்தார். இந்த நிலையில் உலக முதலீட்டளர்கள் அமெரிக்கா சீனா வர்த்தக ஒப்பந்தம் குறித்தான சாத்திய கூறுகளை சீராக கண்கானித்து வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்களும் சர்வதேச பங்கு சந்தையில் இருந்து ஒதுங்கினர். இதனாலேயே தங்கத்தின் விலையும் அதிகரித்தது.
தேவை அதிகரிப்பு
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக தங்கம் இறக்குமதி சரிந்து வந்த நிலையில், ராய்ட்டர்ஸ் ஆதாரங்களின் படி நவம்பரில் தங்கம் இறக்குமதி சற்று அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது முகூர்த்த தினங்களும் அதிகம் இருப்பதால், தங்கத்திற்கான தேவையும் அதிகம் இருப்பதால், தங்கத்தின் விலை அவ்வளவாக குறைய வாய்ப்பில்லை. எனினும் அமெரிக்கா சீனா வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications