தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் மாற்றமின்றி ரேஞ்ச் பவுண்டிலேயே காணப்படுகின்றது. இது டாலரில் 1801 - 1840 என்ற லெவலிலேயே காணப்பட்டது. இது டாலரின் மதிப்பு, பத்திர சந்தையில் உள்ள தாக்கம் என பலவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமைந்தது.
இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது கட்டுபாடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
செல்லிங் அழுத்தம்
தொடர்ந்து சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அழுத்தத்திலேயே காணப்படுகிறது. இது டாலரின் மதிப்பானது தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. டாலர் மதிப்பு மற்றும் பத்திர சந்தையில் அழுத்தம் நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் அழுத்தம் காணப்படுகின்றது. எனினும் கடந்த சில தினங்களாகவே செல்லிங் அழுத்தம் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
பணவீக்கம்
தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படும் நிலையில், பணவீக்கமும் உச்சத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது நடப்பு ஆண்டில் சற்றே ஏற்றம் கண்டிருந்தாலும், இது இனி வரும் நாட்களில் எப்படியிருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கிரிப்டோக்கள் சரிவு
நடப்பு ஆண்டில் தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்பட்ட கிரிப்டோகரன்சிகளும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இதுவும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்தது. இது இனியும் நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெசசன் அச்சம்
தொடர்ந்து நடப்பு ஆண்டில் சரிவினைக் கண்டு வரும் பொருளாதாரம், அடுத்த ஆண்டில் ரெசசனுக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.
மீடியம் டெர்மில்
டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தையின் தாக்கம் என்பது சந்தையில் இருக்கலாம். இது மேற்கொண்டு வரும் நாட்களில் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம். எப்படியிருப்பினும் வரும் நாட்களில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1824.35 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாக காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போல அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.203 டாலராக குறைந்து காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு இன்று சற்று குறையலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாக காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து, 54,984 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவினை காட்டிலும், இன்று சற்று அதிகரித்து காணப்பட்டாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 23 ரூபாய் குறைந்து, 69,744 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக ஆபரண தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, 5114 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 40,912 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து, 5578 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு, 210 ரூபாய் அதிகரித்து, 55,790 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 74.50 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 500 ரூபாயாக அதிகரித்து, 74,500 ரூபாயாக விற்பனை செய்யபட்டும் வருகின்றது.
More From GoodReturns

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?



Click it and Unblock the Notifications