தங்கம் ஆபரண விலை சரிவு.. செம குஷியில் முதலீட்டாளர்கள்..!

தங்கத்தினை விரும்பாத பெண்கள் உண்டா என்றால்? நிச்சயம் இருப்பது மிக குறைவே. அதிலும் தென் இந்தியாவில் இது மிக அதிகம். ஏனெனில் தங்கம் மீது அவ்வளவு ஆர்வம்.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, நடப்பு வார தொடக்கம் முதல் கொண்டு மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்தது.

அதிலும் இன்று சர்வதேச மற்றும் இந்திய கமாடிட்டி வர்த்தகம் என இரண்டும் விலை அதிகரித்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது கவனிக்கதக்கது.

இறக்குமதி வரி குறைப்பு

இறக்குமதி வரி குறைப்பு

உலகளவில் புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசிகளும் நடைமுறையில் வந்து கொண்டுள்ளன. அதோடு இந்தியாவில் கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இறக்குமதி வரியை குறைந்தது. இதனால் தங்கத்தின் விலை குறையலாம். தங்கம் விலை குறையும் பட்சத்தில் வாங்க பலரும் ஆர்வம் காட்டலாம். இதனால் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தில் முதலீடுகளை செய்து வரும் நிலையில், சர்வதேச தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது ஏற்றத்தில் உள்ளது. ஆனால் அதே வேளையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சரிவில் காணப்படுகிறது. இதே போல் ஆபரண வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.

 தங்க ஆபரண விலை

தங்க ஆபரண விலை

குறிப்பாக சென்னையில் இன்று தங்க ஆபரணத்தின் விலையானது சரிவில் உள்ளது. இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 4,522 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 36,176 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இனி இந்தியாவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், இந்தியாவில் ஆபரணத் தங்கத்தில் எதிரொலிப்பது கடினம்.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 4,930 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 39,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த சரிவானது குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க நல்ல இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே கிராம் வெள்ளியின் விலையானது 0.80 பைசா குறைந்து, 74.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 800 ரூபாய் குறைந்து 74,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாது, தொழில்துறையிலும் பயன்படுத்தப்படுவதால், வெள்ளியின் தேவையும் வரும் காலத்தில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+