தொடர்ந்து கடந்த நான்கு தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கத்தின் விலைக்கு மத்தியில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சரிவினைக் கண்டுள்ளது. இது நகை வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத பெண்கள் உண்டா என்றால் என்ன நிச்சயம் இருப்பது மிக குறைவே. அதிலும் தமிழகத்தில் இருப்பது மிக குறைவே. அந்தளவுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.
நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது தொடர்ந்து, தங்க நகை ஆர்வலர்களுக்கு, சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் ஆபரண விலையானது சற்று சரிவினைக் கண்டு வந்தது.
தொடர் ஏற்றம்
ஆனால் கடந்த நான்கு தினங்களாக தொடர்ச்சியாக ஏற்றம் கண்டது. இது உலகளவில் புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தில் முதலீடுகளை செய்து வருவதால், தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், மொத்தத்தில் ஏற்றம் கண்டு வருகின்றது. இதனால் ஆபரண தங்கத்தின் விலையும் ஏற்றம் கண்டது.
தேவை அதிகம்
இது சர்வதேச தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் எதிரொலி என்றாலும், இந்தியாவில் ஆபாரண தங்கத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் எதிரொலி பெரியளவில் இருப்பதில்லை. அதோடு, இந்தியாவில் தங்கத்திற்கான தேவையும் அதிகம் உள்ளது. ஆக இதுவும் தங்கத்தின் விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
தங்கம் ஆபரண விலை
சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, 4,664 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து 37,312 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் சில நாட்கள் ஏற்றம் கண்ட தங்கம் விலையானது, ஜனவரிக்கு ஆறுக்கு பிறகு தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 4 தினங்களாக சற்று ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது.
இவ்வளவு அதிகரிப்பா?
கடந்த ஜனவரி 1 அன்று கிராமுக்கு 4,726 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,808 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. எனினும் நடப்பு மாதத்தில் அதிகபட்சமாக ஜனவரி 6 அன்று கிராமுக்கு 4,885 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வந்தது. எனினும் ஜனவரி 21 அன்று கிராமுக்கு 4691 ரூபாயாகவும், சவரனுக்கு 37528 ரூபாயாகவும் சரிந்தது. இதற்கிடையில் இன்று சவரனுக்கு 37,312 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,088 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 40,704 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் கடந்த 4 தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சரிவினைக் கண்டுள்ளது கவனிக்கதக்கது.
ஆபரண வெள்ளி விலை
இதே கிராம் வெள்ளியின் விலையானது ஒரு ரூபாய் குறைந்து 71.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 1000 ரூபாய் குறைந்து 71,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரியில் 6 அன்று 75,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை, ஜனவரி 13 அன்று 70,300 ரூபாயாக குறைந்தது. எனினும் மீண்டும் ஜனவரி 21 அன்று 72,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 71,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications