இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத பெண்கள் உண்டா என்றால் என்ன நிச்சயம் இருப்பது மிக குறைவே. அதிலும் தென் இந்தியாவில் இது மிக அதிகம். ஏனெனில் தங்கம் மீது அவ்வளவு ஆர்வம்.
நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று முதலீட்டாளர்களுக்கும் தங்க ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது பலமான வீழ்ச்சியை கண்டுள்ளது.
உலகளவில் புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தில் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது பலமான ஏற்றத்தில் உள்ளது. ஆனால் அதே வேளையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சரிவில் காணப்படுகிறது.
தங்கம் ஆபரண விலை
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது பலமான சரிவில் உள்ளது. இன்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 4,805 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 38,440 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று பலமான சரிவினைக் கண்டுள்ளது.
இவ்வளவு அதிகரிப்பா?
கடந்த ஜனவரி 1 அன்று கிராமுக்கு 4,726 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,808 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. எனினும் நடப்பு மாதத்தில் அதிகபட்சமாக ஜனவரி 6 அன்று கிராமுக்கு 4,885 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக புத்தாண்டு தொடங்கிய இன்றோடு ஏழு நாட்களில், 6 நாட்கள் வீழ்ச்சி கண்ட நிலையில், இன்று கிராமுக்கு 4805 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, 38,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 88 ரூபாய் குறைந்து 5,241 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 704 ரூபாய் குறைந்து 41,928 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் கடந்த ஆறு தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சரிவினைக் கண்டுள்ளது.
ஆபரண வெள்ளி விலை
இதே கிராம் வெள்ளியின் விலையானது 74.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 900 ரூபாய் குறைந்து 74,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரியில் 6 அன்று 75,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications