கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் வேலையின்மை, இன்னும் பல காரணிகளால் தங்கம் விலையானது தொடர்ந்து விண்ணை எட்டி வருகின்றது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக விலை சரிந்து வருகின்றது.
உலகளவில் புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தில் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது பலமான ஏற்றத்தில் உள்ளது. ஆனால் அதே வேளையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சரிவில் காணப்படுகிறது.
தங்கம் ஆபரண விலை
சென்னையில் இன்றும் தங்கம் ஆபரணத்தின் விலையானது சரிவில் உள்ளது. இன்று கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து, 4,792 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 38,336 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியாக ஆறு தினங்களாகவே ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது, இது தங்க ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இவ்வளவு அதிகரிப்பா?
கடந்த ஜனவரி 1 அன்று கிராமுக்கு 4,726 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,808 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. எனினும் நடப்பு மாதத்தில் அதிகபட்சமாக ஜனவரி 6 அன்று கிராமுக்கு 4,885 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக புத்தாண்டு தொடங்கிய இன்றோடு எட்டு நாட்களில், 6 நாட்கள் ஏற்றம் கண்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்டுள்ளது.
தூய தங்கம் விலை
இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 5,227 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 41,816 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் கடந்த ஆறு தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று சரிவினைக் கண்டுள்ளது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று ஏற்றம் கண்டுள்ளது. இன்று கிராம் 74.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 300 ரூபாய் அதிகரித்து 74,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரியில் 7 அன்று 74,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?



Click it and Unblock the Notifications