தங்கம் ஆபரணத்தின் விலையானது கடந்த ஏழு நாட்களில் ஒரே நஆள் மட்டும் தான் ஏற்றம் கண்டுள்ளது. மற்ற ஆறு நாட்கள் சரிவினைக் தான் கண்டுள்ளது. ஆக இது தங்க நகை ஆர்வலர்களுக்கு சிறந்த வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத பெண்கள் இருப்பது மிக குறைவு. குறிப்பாக தமிழகத்தில் இருப்பது மிக குறைவே. அந்தளவுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.
நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இது தங்க நகை ஆர்வலர்களுக்கு, சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக உள்ளது.

தேவை அதிகம்
இது சர்வதேச தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் எதிரொலி என்றாலும், இந்தியாவில் ஆபாரண தங்கத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், தங்க ஆபரண விலையில் அதன் எதிரொலி பெரியளவில் இருப்பதில்லை. எனினும் கடந்த சில வாரங்களாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்தியாவில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அது இன்னும் விலை சரிவுக்கு வழிவகுத்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சவரனுக்கு 700 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 89 ரூபாய் குறைந்து, 4,266 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 712 ரூபாய் குறைந்து 34,128 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வருட தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது சரிந்து வரும் நிலையில், இது தங்க ஆர்வலர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை
இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 97 ரூபாய் குறைந்து 4,654 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 776 ரூபாய் குறைந்து 37,232 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் கடந்த 7 தினங்களில் ஒரு நாள் மட்டுமே ஏற்றம் கண்ட நிலையில், இன்றும் சரிவினைக் கண்டுள்ளது

ஆபரண வெள்ளி விலை
இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1.30 ரூபாய் குறைந்து 72 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிலோவுக்கு இன்று 1300 ரூபாய் குறைந்து 72,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த ஏழு தினங்களில் 5 நாட்கள் சரிவிலும், இரண்டு நாட்கள் ஏற்றத்திலும் காணப்பட்டது.