தட தட சரிவில் தங்க ஆபரணம் விலை.. மூன்றாவது நாளாகவும் பலத்த வீழ்ச்சி..!

உலகளவில் புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தில் முதலீடுகளை செய்து வந்தனர்.

ஆனால் இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது பலமான ஏற்றத்தினை கண்டு வந்தது. அதே நேரம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஏற்றத்தில் இருந்து வந்தது.

எனினும் கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளாகவே, டாலரின் மதிப்பு வலுவடைந்த நிலையில் தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டு வருகின்றது. இதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலையானது மூன்றாவது நாளாகவும் சரிவில் காணப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்றும் தங்கம் ஆபரணத்தின் விலையானது பலத்த சரிவில் உள்ளது. இன்று கிராமுக்கு 92 ரூபாய் குறைந்து, 4,700 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 736 ரூபாய் குறைந்து 37,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியாக முதல் ஆறு தினங்களாகவே ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், அடுத்த மூன்றாவது நாளாக விலை தொடர்ச்சியாக விலை குறைந்து வருகின்றது. இது தங்க ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இவ்வளவு அதிகரிப்பா?

இவ்வளவு அதிகரிப்பா?

கடந்த ஜனவரி 1 அன்று கிராமுக்கு 4,726 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,808 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும் நடப்பு மாதத்தில் அதிகபட்சமாக ஜனவரி 6 அன்று கிராமுக்கு 4,885 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக புத்தாண்டு தொடங்கிய இன்றோடு ஒன்பது நாட்களில், 6 நாட்கள் ஏற்றம் கண்ட நிலையில், மூன்று நாட்கள் தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்டுள்ளது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 5,127 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 41,016 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் கடந்த ஆறு தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்றோடு கடைசி மூன்று தினங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது நேற்று குறையவில்லை. எனினும் இன்று அதனையும் சேர்த்து குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 5.50 ரூபாய் குறைந்து, 69 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கிலோவுக்கு இன்று 5,500 ரூபாய் குறைந்து 69,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+