2022 முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தங்கம் விலையானது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இது டாலரின் மதிப்பானது மீண்டும் பின் வாங்கத் தொடங்கியுள்ளது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக உள்ளது.
சீனாவில் நிலவி வரும் கொரோனா அச்சத்தின் மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அடுத்த ஆண்டிலும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜனவரியில் தொடங்கி விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையானது அதிகரிக்கலாம்
தங்கம் விலையானது உணர்வுபூர்வமாக 10 கிராமுக்கு 55,000 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு வாரத்தில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி ஒரு ரேஞ்ச்பவுண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விழாக்கால பருவம் என்பதால் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு விலைக்கு சாதகமாக அமையலாம்.
பணவீக்கம் குறையலாம்
எப்படியிருப்பினும் அடுத்த ஆண்டில் பணவீக்கம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தில் சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்பட்ட நிலையில், இது மேற்கோண்டு தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் காணாமல் தடுக்கலாம். தங்கம் விலையானது அதன் 2 வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைந்த பிறகு, 200 டாலர்கள் அதிகரித்துள்ளது.
விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது?
நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், வருட இறுதியில் சற்றே மந்த நிலையை எட்டியது. இது 26 - 30ம் தேதிகளில், தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது. இந்த காலகட்டத்தில் விடுமுறை என்பதால் தேவை சரியலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது 53,900 ரூபாய் வரையில் குறைந்து, இது மீண்டும் 55,000 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4.15 டாலர்கள் குறைந்து, 1818.75 டாலராக குறைந்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாக காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
வெள்ளி விலையானது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.205 டாலர்களாக குறைந்து காணப்படுகிறது. இது சற்று கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாக காணப்படுகிறது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாக காணப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 92 ரூபாய் குறைந்து, 54,905 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்து, 69,780 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையானது சற்று அதிகரித்து வருகின்றது. இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 5105 ரூபாயாக அதிகரித்தும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 40,840 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து, 5569 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு, 170 ரூபாய் அதிகரித்து, 55,690 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது, கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 74.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 74,600 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?



Click it and Unblock the Notifications