தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தடுமாறிக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
தங்க ஆபரணத்தின் விலையானது என்னதான் அதிகரித்தாலும், இன்றும் கடைகளில் அலைமோதும் கூட்டம் சாட்சி சொல்லும் தங்கத்தின் மீது நம்மவர்களுக்கு எவ்வளவு பிரியம் என்று.
தங்கத்தின் விலையானது நடப்பு ஆண்ட தொடக்கம் முதல் கொண்டே குறைந்து வரும் நிலையில், இது தங்க ஆர்வலர்களை வாங்க தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தைகளில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் விலை கடந்த சில அமர்வுகளாக பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தங்கத்தின் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவில் ஆபரண தங்கத்தின் பயன்பாடு அதிகம் என்றாலும், தற்போது இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்க விற்பனையாளர்கள் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
இன்று சென்னையில் தங்கம் விலை எப்படி?
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 4,228 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 33,824 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
தூய தங்கம் விலை
இதே 24 கிராம் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து, 4,612 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 132 ரூபாய் அதிகரித்து, 36,896 ரூபாயாகவும் உள்ளது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே சற்று சரிந்த நிலையில், இன்று மீண்டும் சற்று ஏற்றம் கண்டுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 0.40 பைசா அதிகரித்து, 70.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிலோவுக்கு இன்று 400 ரூபாய் அதிகரித்து, 70,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் நேற்று பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications