இந்தியாவில் ஒரு அவசர பண தேவைக்கு மக்கள் உடனே நாடுவது தங்க நகை கடன் (கோல்டு லோன்) மற்றும் தனிநபர் கடன்களை (பெர்சனல் லோன் )தான். தற்போது வங்கிகளும் போட்டி போட்டு கொண்டு கடன்களை வழங்குகின்றன. அந்த வகையில் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு கோல்டு லோன் சிறந்ததா அல்லது பெர்சனல் லோன் சிறந்ததா? இரண்டிலும் உள்ள சாதக , பாதகங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கோல்டு லோன்: நம் வசம் இருக்கும் தங்க நகை , தங்க நாணயம் ஆகியவற்றை அடமானமாக வைத்து கடன் வாங்குவது தான் கோல்டு லோன். பொதுவாக அன்றைய நாளில் தங்கத்தின் விலையில் 70 சதவீத தொகையை கடனாக வழங்குகிறார்கள். ஒரு சவரன் தங்கம் என்றால் சராசரியாக 80,000 ரூபாய் வரை கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. தங்க கடன் மக்களிடையே புகழ் பெற்றவை.

வங்கிகளோம் நிதி நிறுவனங்களோ நாம் சென்று தங்கத்தை வழங்கிய 30 நிமிடங்களில் கடன் தொகையை தருகின்றன. வங்கிகளுக்கு கடன் பணம் திரும்ப வரவில்லை என்றால் கூட இந்த தங்கத்தை விற்பனை செய்து அவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வார்கள் எனவே இதனை தான் அதிகம் விளம்பரம் செய்கின்றன.
பெர்சனல் லோன்: அடமானம் எதுவும் இல்லாமல் வழங்கக்கூடிய ஒரு கடன். பாதுகாப்பற்ற ஒரு கடன் என்றும் சொல்லலாம். ஒரு தனிநபரின் வருமானம், வேலை , கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த கடன் வழங்கப்படுகிறது . எந்த ஒரு பொருளையும் அடமானமாக கொண்டு இந்த கடன் வழங்கப்படுவதில்லை என்பதால் இதில் வட்டி விகிதம் என்பது சற்று அதிகமாகவே இருக்கும்.
தங்க கடனில் நாம் நகையை அடமானமாக வைப்பதால் அதற்கான வட்டி குறைவாக இருக்கும். அதுவே தனிநபர் கடனுக்கு தங்க கடனை விட வட்டி அதிகமாக இருக்கும். சராசரியாக தங்க நகைகளுக்கு 8 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. இது கடன் வழங்கக்கூடிய நிறுவனத்தை பொறுத்தது.
தனிநபர் கடனில் 10% முதல் 24% வரை வட்டி விகிதம் இருக்கும். இதற்கான பிராசசிங் கட்டணம் நாம் பெறக்கூடிய கடன் தொகையில் 1 முதல் 3 சதவீதமாக இருக்கும். எனவே வட்டி அடிப்படையில் பார்க்கும்போது தங்க கடன்கள் சிறந்தவையாக இருக்கின்றன.
நாம் அடகு வைக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பை பொறுத்து நமக்கான கடன் தொகை என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த தங்கத்தை 12 மாதங்களில் மீட்க வேண்டும். பெர்சலன் லோன் நம்முடைய கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் முடிவு செய்வார்கள். 40 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும் 12 மாதங்களில் இருந்து 60 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
தங்கம் எவ்வளவு மதிப்பு அன்றைய நாள் விலை என்ன அடிப்படை ஆவணங்களை சரி பார்த்து 30 நிமிடங்களுக்குள் பணத்தை கையில் கொடுத்து விடுவார்கள். ஆனால் தனி நபர் கடன்கலுக்கு கிரெடிட் ஸ்கோர் மற்றும் பல ஆவணங்களை ஆய்வு செய்வார்கள் என்பதால் ஒரே நாளில் கிடைக்காது. அதே போல தங்க கடனுக்கு ஆவணம் எதுவும் தேவையில்லை. நகை மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போதும். தனிநபர் கடனுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள், பே சிலிப், கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றை கேட்பார்கள்.
எனவே வட்டி அடிப்படையிலும் உடனே கிடைக்கும் பணம் என்ற அடிப்படையிலும் பார்த்தால் தங்க நகை கடன்கள் தான் பெஸ்ட். ஆனால் என்னிடம் தங்கம் இல்லை, அதே போல ஓராண்டுக்குள் திரும்ப செலுத்த முடியாது என்பவர்கள் பெர்சனல் லோன்களுக்கு செல்லலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

