சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே, பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் சற்று சரிவினைக் கண்ட நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

இது அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டிருந்தாலும், தொடர்ச்சியாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக பெரியளவில் ஏற்றம் கண்டு வருகின்றது.

குறிப்பாக கடந்த வாரத்தில் விலை எப்படி இருந்தது? இனி வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? தற்போது வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,000 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது. ஏற்கனவே தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதிலும் முந்தைய கணிப்புகள் எல்லாமே, 2,000 டாலர்களை உடைக்கும், 2100 டாலர்களை தொடும், புதிய உச்சத்தினை எட்டும் என்றும் நிபுணர்கள் தொடர்ச்சியாக கணித்து வந்தனர்.

விலை அதிகரிப்பதற்கான அறிகுறி

விலை அதிகரிப்பதற்கான அறிகுறி

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் முக்கிய லெவலான 1760 டாலர்களை உடைக்காமலேயே இருந்து வந்தது. இந்த லெவலை உடைக்கும் பட்சத்தில், தங்கம் நல்ல ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் கூறி வந்த நிலையில், கடந்த வாரத்தில் அந்த முக்கிய லெவலையும் உடைத்துக் காட்டியுள்ளது. அதற்கு மேலாகவும் நிலையான நின்றும் வர்த்தகமாகியுள்ளது. கடந்த வாரத்தில் முடிவு விலையும் கூட 1770 டாலர்களுக்கு மேலாக முடிந்துள்ளது. ஆக தங்கம் விலை அதிகரிக்கலாம் என்பதற்கு, இதுவும் ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது, 2 நாட்கள் சரிவினை கண்டிருந்தாலும், அதற்கும் சேர்த்து மீதமுள்ள நாட்கள் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 1740.80 டாலர்களாக தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1779.50 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்சம் 1722.10 டாலர்களை தொட்டது. இதுவே இந்த வாரத்தின் குறைந்த விலையாகும். முடிவில் 1776.90 டாலர்களாக முடிவுற்றது. வரும் வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் பலமான ஏற்றத்திலேயே காணப்பட்டது. வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமையன்று 25.300 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்சமாக 24.680 டாலர்களை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 26.380 டாலர்களை தொட்டு, பின்னர் 26.032 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையும் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் திங்கட்கிழமையன்று 10 கிராமுக்கு 46,545 ரூபாயாக தொடங்கிய நிலையில், அடுத்த நாளே 46,367 ரூபாய் வரை குறைந்து பின் ஏற்றம் கண்டது. இதே வெள்ளிகிழமையன்று அதிகபட்சமாக 47,432 ரூபாயாக அதிகரித்து, 47,353 ரூபாயாக முடிவுற்றது. இது கடந்த வாரத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலை, கடந்த வாரத்தில் 800 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த திங்கட்கிழமையன்று, 66,786 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்று குறைந்தபட்சமாக 65,961 ரூபாயாகவே இருந்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 69,271 ரூபாயினை தொட்டது. எனினும் முடிவில் 68,684 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தில் மட்டும் 1800 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 9,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,040 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் இன்று கிராமுக்கு 4453 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,624 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,900 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வாரம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 47,780 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 48,570 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் சில தினங்கள் விலையில் பெரியளவில் மாற்றமில்லை என்றாலும், மற்ற நாட்களில் பெரியளவில் ஏற்றம் கண்டது. இன்று கிராமுக்கு 73.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 737 ரூபாயாகவும், கிலோவுக்கு 73,700 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 68,500 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 73,700 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 5,200 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

அடுத்த வாரத்தில் இங்கிலாந்தின் லேபர் சந்தை டேட்டா, மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய டேட்டாக்கள் உள்ளன. ஆக இதெல்லாம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் நிலையில், என்ன அறிவிப்புகள் வருமோ என்பதை முதலீட்டாளர்கள் கவனிப்பார்கள். இது தவிர அமெரிக்காவின் பிஎம்ஐ விகிதம், வேலையின்மை நலன் குறித்த டேட்டா, உள்ளிட்ட முக்கிய டேட்டாக்களும் உள்ளன.

நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இந்த ஆண்டில் 2200 டாலர்களை தொடலாம் என WELLS fargo கணித்துள்ளது. இதே இன்வெஸ்கோ இந்த ஆண்டில் 1850 டாலர்களை தொடலாம் எனவும், ANZ bank அவுன்ஸூக்கு 2,100 டாலர்களை தொடலாம் எனவும், கோல்டுமேன் சாச்சஸ் 2000 டாலர்களை தொடலாம் எனவும், பேங்க் ஆப் அமெரிக்கா 2000 டாலர்களை தொடலாம் எனவும் முன்னரே கணித்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த இடத்தில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold may hit $1800 in next week

Gold weekly updates.. gold may hit $1800 in next week
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X