தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. ரூ.40,500 வரை சரிய வாய்ப்பு!

இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த முதலீடான தங்கம், விலை உயர்வின் காரணமாகச் சாமானிய மக்கள் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்தக் கொரோனா காலத்தில் பல குடும்பங்கள், அடிப்படை செலவுகளுக்குப் போதுமான பணம் இல்லாத காரணத்தால் தங்க நகைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் இதேவேளையில், தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்கத்தை விற்பனை செய்து அதிகளவிலான லாபத்தையும் பெற்றனர்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் அடுத்த சில வாரங்களில் தங்கம் விலை 8 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைய உள்ளது

100 சதவீதம் லாபம்

100 சதவீதம் லாபம்

இந்திய ரீடைல் சந்தையில் இந்த வருடம் அதிகப்படியாக 10 கிராம் தங்கம் 55,900 ரூபாய் முதல் 56,000 ரூபாய் அளவீட்டில் விற்பனை செய்யப்பட்டது.

4 வருடத்திற்கு முன் 25,000 ரூபாய் அளவில் இருந்து தங்கம் விலை தற்போது 100 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது, இந்த 4 வருட காலத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 25,000 அளவில் இருந்து 56,000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

 

அதிகப்படியான லாபம்

அதிகப்படியான லாபம்

இந்த வருடம் மட்டும் தங்கம் மீதான முதலீட்டுக்கு சுமார் 37-38 சதவீதம் லாபத்தைக் கொடுத்துள்ளது. 2020ல் 10 கிராம் தங்கம் விலை 40,000 ரூபாய் அளவீட்டில் இருந்து அதிகப்படியாக 56,000 ரூபாய் அளவீட்டையும், தற்போது 49,200 ரூபாய் அளவிலும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

2 மாதத்தில் சரிவு

2 மாதத்தில் சரிவு

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 2 மாதமாக 48,500 முதல் 51,000 ரூபாய் அளவீட்டில் வர்த்தகம் செய்யப்படுகிறது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து உலகின் பல நாடுகளில் அடுத்த சில மாதங்களில் வரும் காரணத்தால் தங்கம் விலை பெரிய அளவில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 முதல் 10% சரிவு

8 முதல் 10% சரிவு

கொரோனாவுக்கான மருந்து 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் பெரும்பாலான நாடுகளுக்கு அதிகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்கம் விலை 8 முதல் 10 சதவீதம் வரையில் குறையும்.

இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் தங்கம் மீது அதிகளவில் முதலீடு செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம்.

 

நீண்ட கால முதலீடுகள்

நீண்ட கால முதலீடுகள்

இதேவேளையில் உலக நாடுகளின் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் தங்கம் விலையில் தற்போதைய உச்ச விலையான 56,000 ரூபாய் அளவை அடைவது குறுகிய கால முதலீட்டில் நடக்காது.

எனவே முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டுக்குத் தயாரான பின்பு தங்கத்தில் முதலீடு செய்யத் தயாராகுங்கள்.

 

சர்வதேச முதலீட்டாளர்கள்

சர்வதேச முதலீட்டாளர்கள்

ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் மீண்டும் ஒரு பொருளாதாரச் சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் தனியார் மற்றும் அரசுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது. இதனால் தங்கம் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முக்கிய முதலீடாகவே இருக்கும்.

2021ல் தங்கம்

2021ல் தங்கம்

இதேவேளையில் கொரோனா தொற்றுத் தடுப்பு மருந்து மூலம் கட்டுப்படுத்தப்பட்டால் 2021ஆம் ஆண்டில் தங்கம் விலை 40,000 முதல் 50000 ரூபாய் வரையில் சரியும். இதேபோல் குறைந்தபட்சமாக 40,500 ரூபாய் வரையில் சரியும் சாதகமான வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+