சமீபத்திய வாரங்களாகவே தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளியே இருக்காதா? இது பழைய நிலைக்கு திரும்பவே திரும்பாதா? இனி நாம் வாங்க முடியாதா என நினைப்பவர் ஏராளம்.
அப்படி நினைப்பவர்களுக்கு தங்கம் மிகச் சிறந்ததொரு ஆப்சன் ஆகவே இருக்கலாம். ஆனால் அது இப்போதைக்கு அப்படி இருக்காது, எனினும் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுக்கும் ஒன்றாக இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
தங்கம் விலையானது இந்தியாவில் 10 கிராமுக்கு 24 கேரட் 60,000 ரூபாயினை எட்டியுள்ள நிலையில், இன்னும் சர்வதேச சூழல் என்பது மோசமான சூழலிலேயே உள்ளது. ஆக தங்கம் விலை என்னவாகுமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
குறிப்பாக அமெரிக்க வங்கித் துறையில் நிலவி வரும் அச்சம் என்பது, பொருளாதாரத்தினையும் பதம் பார்க்கலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு
குறிப்பாக தற்போது மத்திய வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்காது என்று சிக்னல் காட்டியுள்ள நிலையில், இது இன்னும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது பின்னடைவை காணத் தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். குறிப்பாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீடியம் டெர்மில் எப்படி?
எனினும் மீடியம் டெர்மில் அப்படி இல்லை. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைய வாய்ப்பில்லை. ஆனால் தற்போதைய லெவலில் தொடர்ந்து நீடித்தால் இது மீண்டும் 1850 - 1875 டாலர்களை கூட எட்டலாம். ஆக அங்கிருந்து படிப்படியாக மீண்டும் ஏற்றம் காண ஆரம்பிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிறந்த அசெட்
எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் ஒரு சிறந்த அசெட் ஆக தங்கம் இருக்கலாம். ஆக உங்களது போர்ட்போலியோவில் ஒரு பகுதி ஒதுக்கி வைக்கலாம்.
பெடரல் ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், பல நிபுணர்களும் இந்த நிலை இனி தொடராது என்று கூறுகின்றனர். ஏற்கனவே அமெரிக்க வங்கித் துறையானது பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ள நிலையில், இது இனி தொடராது என மதிப்பிடுகின்றனர். ஆக தங்கம் விலையானது இதனை பொறுத்தும் மாறுபடலாம் என்கின்றனர்.
டாலர் & பத்திர சந்தை
அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தை என இரண்டும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக அந்த சமயத்தில் சிறந்த பாதுகாப்பு அம்சமாக தங்கம் இருக்கலாம். எனினும் மீடியம் டெர்மில் வரவிருக்கும் தரவுகள், நீடித்த கடன் குறித்தான அம்சங்கள் என பலவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இப்போது வாங்கலாமா?
டாலரில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 1965 அல்லது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 24 கேரட் தங்கம் விலையானது 60000 ரூபாயினையும் தாண்டியுள்ளது. எனினும் உலகளாவிய அளவில் வட்டி விகிதம் என்பது இன்னும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. அதிகளவிலான பணவீக்கம் மற்றும் அமெரிக்க பொருளாதாரம் என்பது சற்றே நன்றாக செயல்படுகிறது. ஆக இது தங்கம் விலையில் தற்போதைக்கு பெரியளவில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
ஆனால் தொடர்ந்து பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது 2% வருமா? என்பதே கேள்வியாக உள்ளது. இந்த சமயத்தில் மத்திய வங்கி இது வரும் வரையில் வட்டி விகிதத்தினை உயர்த்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம். ஆக எப்போதெல்லாம் விலை குறைகின்றதோ? அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!



Click it and Unblock the Notifications