Gold: தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது 7 வார சரிவில் டாலரின் மதிப்பானது காணப்படும் நிலையில், இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது. தொடர்ந்து டாலரின் மதிப்பானது உணர்வுப்பூர்வமாக 102 லெவலுக்கு மேலாக தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்தால், தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் நடப்பு காண்ட்ராக்ட் ஏப்ரல் 2023 அன்று எக்ஸ்பெய்ரி ஆக உள்ள நிலையில், இது வரவிருக்கும், இதன் விலை 10 கிராமுக்கு 59,310 ரூபாயாகவும், இதே சர்வதேச ஸ்பாட் சந்தையில் அவுன்ஸூக்கு 1976.90 டாலராகவும் காணப்பட்டது.
நிபுணர்களின் கணிப்பு என்ன?
தங்கம் விலையானது வரும் வாரத்தில் டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்தால், அது தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக வரும் வாரத்தில் இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. இதே வரவிருக்கும் வாரத்தில் புதிய வீடு விற்பனை மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது உள்ளிட்ட பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன. ஆக இதன் எதிரொலியும் வரவிருக்கும் வாரத்தில் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.
குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு?
அமெரிக்காவின் மத்திய வங்கியானது தொடர்ந்து பணவீக்கத்தினை குறைக்கும்பொருட்டு, வட்டி விகிதத்தினை தொடர்ந்து உயர்த்தி வந்தது. இதுவே பொருளாதார தாக்கத்தின் மத்தியில் மேலும், தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆக வரும் வாரத்திலும் தங்கம் விலையானது ஒரு வேளை குறைந்தாலும் கூட, அது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
எப்படியிருப்பினும் வரவிருக்கும் வாரத்திலும் தங்கம் விலையானது 1920 - 2010 டாலர்களுக்கு இடையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். வரும் நாட்களில் டாலரின் மதிப்பானது 7 வார சரிவில் இருந்து மீண்டு வரலாம், அதோடு அமெரிக்காவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது மிக முக்கிய தரவுகளாக பார்க்கப்படுகின்றன.
குறையும்போதெல்லாம் வாங்கலாம்
இதற்கிடையில் சந்தை நிபுணர்கள் அமெரிக்க மத்திய வங்கியாளர்கள் நடப்பு ஆண்டில் இன்னொரு முறை வட்டி அதிகரிப்பினை செய்யலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தங்கத்தினை குறையும்போதெல்லாம் வாங்கி வைக்கலாம் எனவும் பரிந்துரை செய்கின்றனர்.
இந்திய ரூபாய் மதிப்பு
இந்த ரூபாயின் மதிப்பும் மீடியம் டெர்மில் சற்று அழுத்தத்திலேயே காணப்படுகின்றது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் குறையும்போதெல்லாம் வாங்கலாம் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications