Gold:தங்கம் விலையானது தொடர்ந்து வரலாற்று உச்சத்தினை எட்டி வருகின்றது. இந்த வாரத் தொடக்கத்தில் 1400 ரூபாய் ஏற்றம் கண்டு, 60,000 ரூபாயினை முதல் முறையாக கடந்தது. இது அமெரிக்காவின் இரண்டு முக்கிய வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி மற்றும் சுவிஸ் வங்கி என மூன்றும் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை எட்டத் தொடங்கியுள்ளது.
இது போகிற போக்கினை பார்த்தால் இனி குறையவே குறையாதா? இனி என்னவாகுமோ என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2000 டாலர்களுக்கு அருகிலேயே வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் 2000 டாலர்களை கடந்த நிலையில், இன்றும் மேற்கொண்டு 2000 டாலர்களை உடைக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம்
தொடர்ந்து வங்கிகளில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் பங்கு சந்தைகள் கடும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. இதன் காரணமாக பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் தான் பெஸ்ட்
ஏற்கனவே 60,000 ரூபாயினை உடைத்துள்ள நிலையில், இது தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கடந்த 2019ல் இருந்தே தங்கம் விலையானது வலுவான லாபத்தினை கொடுத்து வருகின்றது. 2019 காலக்கட்டத்தில் 10 கிராமுக்கு 31,000 ரூபாயாக இருந்த தங்கம் விலையானது, நடப்பு ஆண்டில் 60,000 ரூபாய்க்கு மேலாக காணப்படுகின்றது. கடந்த 4 ஆண்டுகளில் 25% எனும் அளவுக்கு லாபம் கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் மற்ற முக்கிய முதலீடுகள் 15% எனும் அளவுக்கே லாபம் கொடுத்துள்ளன.
அடுத்த முக்கிய லெவல்
கடந்த 2019ல் இருந்து கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் ரஷ்யா பிரச்சனை என பல காரணிகளும் தொடர்ந்து தங்கத்திற்கு ஆதரவாக அமைந்தன. தற்போது வங்கி துறையில் நிலவி வரும் நெருக்கடி, குறிப்பாக சிலிக்கான் வேலி வங்கி நெருக்கடி, கிரெடிட் சூசி பிரச்சனை என பலவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளன. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க காரணமாக அமைந்துள்ளன. இது தொடர்ந்து நேர்மறையாக காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 61,500 ரூபாயாகவும் உள்ளது.
தங்கம் விலையை ஊக்குவிக்கலாம்
தொடர்ந்து பொருளாதாரமும் சரிவில் காணப்படும் நிலையில், வட்டி விகிதம் என்பது மெதுவாக காணப்படுகின்றது. ஆக தங்கம் விலையானது 7 - 8% எனும் அளவுக்கு கடந்த மாதம் ஏற்றம் கண்டது. இது தவிர வங்கி நெருக்கடி என்பது தங்கம் விலையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் மத்திய வங்கிகள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம்.
விலை அதிகரிக்கலாம்
ஆக வரும் வாரத்தில் 61,000 - 62,000 ரூபாய் எனும் அளவுக்கு உச்சம் தொடலாம் என தெரிகிறது. இது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2050 - 2100 என்ற லெவலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு மாதத்தில் இதுவரையில் 8% வரையில் ஏற்றம் கண்டுள்ளது. இது தொடர்ந்து நிதித்துறை மற்றும் வங்கித்துறையில் நிலவி வரும் நிலைக்கு மத்தியில் இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.50 டாலர்கள் குறைந்து, 1994.45 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.03% குறைந்து, 23.253 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 103 ரூபாய் அதிகரித்து, 59,477 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 70,260 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 5560 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 44,480 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 6065 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்து, 60,650 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 75.70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 75,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் தடுமாற்றம்.. இப்போ முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா..?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?



Click it and Unblock the Notifications