தங்கம் வாங்கப் போறீங்களா? சூடு பிடிக்கும் தங்கம் விலை! சூப்பர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராக்கெட் போல, கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது தங்கம் விலை. இந்த விலை ஏற்றம், கடந்த ஆகஸ்ட் 2020-ல் தான் நின்றது.

ஆகஸ்ட் 2020-க்குப் பிறகு தங்கம் விலை மெல்ல சரியத் தொடங்கியது. செப்டமப்ர் 2020 தொடக்கத்தில் ஒரு குட்டி ஏற்றம் கண்டது. அந்த உச்சத்தை இன்று வரை கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது தங்கம் விலை.

இப்போது மீண்டும் தங்கம் விலை தன்னை நிதானித்துக் கொண்டு, ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. நீண்ட காலத்தில், தங்கம் விலை ஒரு பெரிய விலை ஏற்றத்தைக் காணும் எனக் கணித்து இருக்கிறார்கள்.

என்ன விஷயங்களைப் பார்க்கப் போகிறோம்

என்ன விஷயங்களைப் பார்க்கப் போகிறோம்

சென்னை ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன? மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை என்ன? ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் (XAU USD CUR) விலை என்ன? தங்கம் எவ்வளவு ஏற்றம் காணலாம்? என்பதை எல்லாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

Gold Rate today - சென்னையில் தங்கம் விலை

Gold Rate today - சென்னையில் தங்கம் விலை

தமிழகத்தின் அரசியல் தலைநகரான சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, இன்று 53,310 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,870 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது.

MCX Gold - தங்கம் விலை

MCX Gold - தங்கம் விலை

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான (எம் சி எக்ஸ்) 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் விலையான 50,817 ரூபாயை விட 253 ரூபாய் (0.5 %) விலை ஏற்றம் கண்டு 51,070 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

MCX Silver - வெள்ளி விலை

MCX Silver - வெள்ளி விலை

இந்திய கமாடிட்டி சந்தையில் வர்த்தகமாகும், டிசம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த 09 அக்டோபர் 2020 குளோசிங் விலையான 62,884 ரூபாயில் இருந்து 1,071 ரூபாய் (1.7 %) விலை ஏற்றம் கண்டு 63,955 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

XAU USD CUR - தங்கம் விலை

XAU USD CUR - தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, கடந்த அக்டோபர் 09, 2020 அன்று 1,930 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. சனி & ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதால் சர்வதேச தங்கம் வர்த்தகமாகவில்லை. தற்போது 2 டாலர் விலை இறக்கம் கண்டு 1,928 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சூடு பிடிக்கும் தங்கம் விலை - எப்படி?

சூடு பிடிக்கும் தங்கம் விலை - எப்படி?

1. 51,870 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருந்த 24 கேரட் 10 கிராம் சென்னை ஆபரணத் தங்கம் விலை இன்று 53,310 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
2. எம் சி எக்ஸ் தங்கம் 49,252 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்தது, இன்று 51,070 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
3. ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 1,861 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது, இன்று 1,928 டாலருக்கு வர்த்தகமாகிறது. ஆக எல்லா விதமான தங்கத்தின் விலையும் மெல்ல சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

சொதப்பலில் ஸ்டிமுலஸ் பேக்கேஜ்

சொதப்பலில் ஸ்டிமுலஸ் பேக்கேஜ்

அமெரிக்க அரசு, 1.8 ட்ரில்லியன் டாலருக்கு ஸ்டிமுலஸ் பேக்கேஜைக் கொண்டு வர இருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த 1.8 ட்ரில்லியன் டாலர் பேக்கேஜை, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி என இரு தரப்புமே வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரித்து இருக்கிறார்கள். இது ஏற்றம் கண்டு வந்த தங்கம் தடுமாற முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

இறக்கத்தில் டாலர் இண்டெக்ஸ்

இறக்கத்தில் டாலர் இண்டெக்ஸ்

ஒரு பக்கம் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் சொதப்பிக் கொண்டு இருக்க, மறு பக்கம் அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் (DXY:CUR) மேலும் சரிந்து, 93.08 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 94.64 புள்ளிகளில் இருந்து கடந்த சில நாட்களாக டாலர் இண்டெக்ஸ் வீழ்ச்சி கண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சர்வதேச தங்கம் விலை பெரிய வீழ்ச்சி காணாமல் 1,930 டாலருக்கு அருகிலேயே வர்த்தகமாகி வருவது, தங்கம் அடுத்த ஏற்ற டிரெண்டுக்கு தயாராகிக் கொண்டு இருப்பது போலத் தெரிகிறது.

ஜனநாயகக் கட்சி வந்தால் பெரிய பேக்கேஜ்

ஜனநாயகக் கட்சி வந்தால் பெரிய பேக்கேஜ்

நவம்பர் 2020-ல் நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்றால், தற்போது பேசப்பட்டுக் கொண்டு இருக்கும் ஸ்டிமுலஸ் பேக்கேஜ்களை விட பெரிய தொகை ஒதுக்கீடு செய்யப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு உலகம் முழுக்க இருக்கும் ஒரு வித பொருளாதார நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால், தங்கம் விலை அதிகரிக்கலாம் என்கிறது லைஃப் மிண்ட் செய்திகள்.

தங்கம் $3,000 - $5,000 தொடலாம் - தாமஸ் கப்லன்

தங்கம் $3,000 - $5,000 தொடலாம் - தாமஸ் கப்லன்

கடந்த மே 2019-ல், தாமஸ் கப்லன் (Thomas Kaplan) என்கிற ஃபண்ட் மேனேஜர் ப்ளூம் பெர்க் நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில், தங்கம் விலை அடுத்த 10 ஆண்டுகளில் 3,000 - 5,000 டாலர் வரைத் தொடலாம் எனச் சொல்லி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

க்ரெடிட் சூசி, கோல்ட் மேன் சாக்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா என பல்வேறு தரகு நிறுவனங்கள் 2,300 - 3,000 டாலர் வரை தங்கம் விலை அதிகரிக்கும் எனக் கணித்து இருப்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே, தங்கம் வாங்க விரும்புபவர்கள், கோட்டக் செக்யூரிட்டீஸ் சொன்னது போல விலை இறங்கும் போது எல்லாம் தங்கத்தில் முதலீடு செய்து, நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price: Are you going to buy gold? Use this good chance to buy gold

Are you going to buy gold? Use this good chance to see a good profit in gold price surge.
Story first published: Monday, October 12, 2020, 13:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X