வியாழக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் விலை சுமார் 175 ரூபாய் சரிவில் முடிவடைந்துள்ளதால் சேமிப்பிற்காகத் தங்கம் வாங்க நினைப்பவர்களும், நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீட்டுக்காக வாங்குவோருக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதனால் இனி வரும் நாட்களில் தங்கம் வாங்க மக்கள் கூட்டம் நகைக் கடைகளில் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா..?!
MCX சந்தையில் தங்கம் விலை
இன்றைய MCX வர்த்தகச் சந்தையின் வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை தொடர் வர்த்தகச் சரிவை எதிர்கொண்ட காரணத்தால் 0.40 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதன் மூலம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 44,681 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதன் மூலம் தங்கத்தின் உச்ச விலையான 56,200 ரூபாய் விலையில் இருந்து 11,519 ரூபாய் சரிவில் இன்று தங்கம் விலை உள்ளது.
MCX சந்தையில் வெள்ளி விலை
இதேபோல் போல் MCX சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்றை வர்த்தகத்தில் 65,245 ரூபாய்க்கு முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் கிட்டதட்ட 1,353 ரூபாய் குறைந்துள்ளது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் வெள்ளி சுமார் 2.07 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,737 டாலர் வரையில் உயர்ந்த நிலையில், இந்திய நேரத்தின் படி வர்த்தகம் முடியும் வேளையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,728 டாலராகக் குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு ஆதிக்கம்
இன்று தங்கம் விலை சரிய முக்கியக் காரணமாக இருந்தது ரூபாய் மதிப்பு என்றால் மிகையில்லை. வியாழக்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து பல மாற்றங்களைச் சந்தித்தாலும் தொடர்ந்து 72.60 ரூபாய் அளவீட்டிலேயே இருந்தது.
தங்கம் விலை உயர வாய்ப்பு
மேலும் அமெரிக்கப் பத்திர சந்தையில் மந்தமான நிலை உருவாகியிருக்கும் நிலையில் அடுத்த சில நாட்களில் தங்கம் விலையில் சில முக்கிய மாற்றங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்க இது சரியான வாய்ப்பாக உள்ளது.
அமெரிக்கப் பத்திர சந்தை
அமெரிக்கப் பத்திர சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் காரணத்தால் தான் இந்திய சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் வெளியேறியது. தற்போது இதில் மந்தமான சூழ்நிலை உருவாகியிருக்கும் நிலையில், பெருமளவிலான முதலீடுகளில் பங்குச்சந்தை, புல்லியன் சந்தைக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.
தங்கம் வாங்க சரியான நேரம்
இதனால் தங்கம் மீதான முதலீட்டுக்கு அதிகளவிலான லாபம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதேவேளையில் இன்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,848 ரூபாய்
- 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,150 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,000 ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,848 ரூபாய்
- 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,150 ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 69,400 ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,880 ரூபாய்
- 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,470 ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 69,400 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications