தங்கம் விலை (Gold Price) தொடர்ந்து 3வது நாளாக சரிவது மட்டும் அல்லாமல் இனி வரும் நாட்களிலும் கடுமையாக சரியும் என கணிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கும் வேளையில் பலர் தங்கத்தை, கிடைக்கும் லாபத்திற்கு விற்பனை செய்து வெளியேறி வருகின்றனர்.
இது தான் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளின் மனநிலையின் வேறுபாடு என் ராபர்ட் கியோசாகியின் சமீபத்திய தனது ட்வீட் மூலம் விளக்கியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராபர்ட் கியோசாகியின் தனது பதிவில் "வால்மார்ட்-ல் தள்ளுபடி விற்பனை வந்தால் ஏழைகள் ஓடிவந்து வாங்குவார்கள். ஆனால் பைனான்சியல் சந்தை சரிந்து 'சேல்' வந்தால் ஏழைகள் பயந்து விற்றுவிட்டு ஓடுவார்கள். பணக்காரர்கள் ஓடிவந்து வாங்குவார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
கியோசாகி தங்கம், வெள்ளி, பிட்காயின் சந்தை சமீபத்தில் சரிந்ததை ஒரு பெரிய சேல் ஆக பார்க்கிறார். "சந்தை சரிந்துள்ளது. நான் பணத்துடன் காத்திருக்கிறேன். தொடர்ந்து தங்கம், வெள்ளி, பிட்காயின் வாங்கத் தயாராக உள்ளேன். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்தொரு சொத்தும் விலை குறைந்தால், குறுகிய கால அடிப்படையிலோ அல்லது நீண்ட கால அடிப்படையிலோ அதன் உச்ச விலைக்கு மீண்டும் செல்வதற்கான வாய்ப்பை கொண்டு இருக்கும். இதனாலேயே விலை சரியும் போது வாங்க வேண்டும் என கூறப்படுகிறது. இதை தான் ராபர்ட் கியோசாகி-யும் கூறுகிறார்.
இந்த ட்வீட் முதலீட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கியோசாகியின் கருத்துப்படி, சந்தை சரிவு (crash) என்பது பணக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்பு. ஏழைகள் பயந்து விற்றுவிடுவார்கள். ஆனால் பணக்காரர்கள் அந்த தருணத்தில் வாங்கி பெரும் லாபம் ஈட்டுவார்கள்.
இந்த கருத்து தற்போதைய சந்தை சூழலுடன் பொருந்துகிறது. தங்கம், வெள்ளி, பிட்காயின் விலைகள் சமீபத்தில் கணிசமாக சரிந்துள்ளன. இதை பயன்படுத்தி நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கத் தயாராக உள்ளனர் என்று சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
சாமானிய மக்களுக்கு இந்த ட்வீட் ஒரு பாடமாக அமைகிறது. சந்தை சரியும் போது பயப்படாமல், தரமான சொத்துக்களை வாங்குவது பணக்காரர்களின் பழக்கம். ஆனால் அனைவரும் இதை செய்ய முடியாது. ஏனெனில் சந்தை சரிவு நீண்டகாலமாக இருக்கலாம். எனவே முதலீட்டாளர்கள் தங்கள் ரிஸ்க் தாங்கும் திறனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
தங்கம் விலை ரூ.1 லட்சம் சரிவு
தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக குறைந்து வரும் வேளையில் முதலீட்டாளர்கள் மிகவும் பயந்துள்ளனர். இதிலும் குறிப்பாக கடந்த சில வாரத்தில் தங்கம் விலை உயர்வை பார்த்து பயந்து போய் கடன், கிரெடிட் கார்டு வாயிலாக தங்கம் வாங்கியவர்கள் பெரும் இழப்பை சந்தித்து உள்ளனர்.
இப்படியிருக்கையில் இன்று ரீடைல் சந்தையில் 1கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,037 ரூபாய் குறைந்து 15,218 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதன் மூலம் 100 கிராம் தங்கம் விலை 1,03,700 ரூபாய் குறைந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications