தங்கம் விலை பெரிய வீழ்ச்சி அடைய போகிறதா? தங்கம் வாங்குவதை தள்ளிப்போடும் நகை வியாபாரிகள்..!!

இந்தியாவில் வழக்கமாக தீபாவளியின் போது தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலை உயரும், வியாபாரிகள் அதிகமாக தங்கம் வாங்கி இருப்பு வைப்பார்கள். ஆனால் தீபாவளி நெருங்கி வரும் நிலையில், நாட்டின் பெரும்பாலான முக்கிய நகை வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் தங்கம் வாங்கும் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. தங்கத்தின் விலை மேலும் சரியக்கூடும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்தை சுத்திகரிக்கும் நிறுவனமான MMTC-PAMP India-வின் தலைமை அதிகாரியும் மேலாண் இயக்குநருமான சமித் குஹா எக்கனாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். நகை விற்பனை செய்யும் பெரிய பெரிய நிறுவனங்கள் இன்னும் பழையபடி நகை ஆர்டர்களை கொடுக்க வில்லை என்றும், சிறு மற்றும் நடுத்தர நகை வியாபாரிகள் மட்டுமே ஓரளவுக்கு தங்கம் வாங்குகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

தங்கம் விலை பெரிய வீழ்ச்சி அடைய போகிறதா? தங்கம் வாங்குவதை தள்ளிப்போடும் நகை வியாபாரிகள்..!!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் தங்கம் விலை சுமார் 24% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜனவரியில் வரலாற்று சாதனையாக 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 1.34 லட்சம் ரூபாயை தொட்டது. அதன் பின் படிப்படியாக குறைந்து 1.05 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு வந்துள்ளது. பெரிய நகை தயாரிப்பாளர்கள் விலை உயர தொடங்கும்போதே எதிர்கால விலை உயர்வை எதிர்கொள்ள முன்கூட்டியே தங்கத்தை வாங்கி இருப்பு வைத்து கொள்வார்கள். ஆனால், விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் இந்த ஆண்டும் தங்கம் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போடுகிறார்கள் என சமித் குஹா கூறுகிறார்.

Also Read

கடந்த மே மாதத்தில் அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தியது முதலே தங்கம் நுகர்வு குறைந்திருப்பதாக் கூறியுள்ள அவர் தங்கம் விலை குறையும், இறக்குமதி வரி குறைக்கப்படும் என வியாபாரிகள் எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.

MMTC-PAMP நிறுவனத்தின் தங்க விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவான நிலையிலேயே உள்ளது. சிறிய தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள் மீதே வாடிக்கையாளர்களின் கவனம் அதிகமாக உள்ளது என கூறியுள்ளார். இயன்றவரை இறக்குமதியை தவிர்த்து பழைய நகைகளையே மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் உத்தியை நகை விற்பனை நிறுவனங்கள் கடைபிடிப்பதாக கூறுகிறார்.

Recommended For You

இதற்கிடையே சிட்டி ரிசர்ச் அமைப்பு, எல் நினோ தாக்கத்தால் கிராமப்புறங்களில் ஏற்பட்ட பருவமழை பாதிப்பு மற்றும் கடுமையான இறக்குமதி விதிகள் காரணமாக இந்தியாவின் தங்க இறக்குமதி குறையும் என தெரிவித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இறக்குமதி சுமார் 106 டன்னாக மட்டுமே இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டின் சராசரியான 212 டன்னுடன் ஒப்பிடும்போது பாதி தான்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+