தள்ளுபடி கொடுக்கும் தங்க டீலர்கள்! பவுன் விலை நிலவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. அது ஒரு துணைக் கண்டம் என்பார்கள். இந்தியாவில் பல வகையான மனிதர்கள், பல மொழி பேசுகிறார்கள், பல விதமான கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.

 

இந்த இந்த நாட்களில், புதிய பொருட்களை வாங்கக் கூடாது என சில நம்பிக்கைகளும் இந்தியாவில் இருக்கின்றன. இந்தியாவில் நேற்று முதல் பித்ரு பக்‌ஷம் தொடங்கிவிட்டதாம். இது பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் கொஞ்சம் மாறுபடலாம்.

இந்த பித்ரு பக்‌ஷ காலத்தில், புதிதாக வீடு வாங்குவது, புதிதாக வாகனங்களை வாங்குவது, தங்கம் வெள்ளி போன்ற நகை நட்டுக்களை வாங்குவதற்கான நல்ல நாள் அல்ல என இந்தியாவில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

தங்க வியாபாரம் டல்

தங்க வியாபாரம் டல்

இந்த பித்ரு பக்‌ஷம் நாட்கள், சுமாராக அடுத்த இரண்டு வார காலத்துக்கு இருக்கும் என்பதால், இந்தியாவில் இயற்கையாகவே, தங்க வியாபாரம் டல்லாகத் தான் இருக்குமாம். எனவே தங்க வியாபாரிகள், ஓரளவுக்காவது தங்கள் வியாபாரத்தை நடத்திக் கொள்ள, தள்ளுபடி விலையில் தங்கத்தை விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.

எவ்வளவு தள்ளுபடி

எவ்வளவு தள்ளுபடி

ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு கடந்த வாரம் 40 டாலர் வரை தள்ளுபடி விலையில் விற்றார்களாம். இப்போது இந்த வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 30 டாலர் வரை தள்ளுபடி கொடுத்து வியாபாரம் செய்வதாகச் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் வலைதளச் செய்திகள்.

டிமாண்ட் சிரமம் தான்
 

டிமாண்ட் சிரமம் தான்

பொதுவாக, அக்டோபர் - நவம்பர் கால கட்டங்களில், இந்தியாவில் பல்வேறு பண்டிகை நாட்கள் வரும். இந்த நேரத்தில் தங்க வியாபாரமும் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை, கொரோனா வைரஸால் பொருளாதாரம் 23.9 % சரிந்து இருக்கிறது. அதோடு, தங்கம் விலையும் அதிகமாக இருப்பதால், பழைய டிமாண்ட் இருப்பது சிரமம் தான் என்கிறார்கள் நகைக் கடை வியாபாரிகள். சரி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை என்ன (சென்னை ஆபரணத் தங்கம்)

தங்கம் விலை என்ன (சென்னை ஆபரணத் தங்கம்)

சென்னையில், நேற்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 53,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பவுனுக்கு 42,744 ரூபாய். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,980 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பவுன் விலை 39,184 ரூபாய். ஆக எப்படிப் பார்த்தாலும், 07 ஆகஸ்ட் 2020 உச்ச விலையை விட, ஆபரணத் தங்கம் விலை இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

எம் சி எக்ஸ் தங்கத்திலும் விலை இறக்கம்

எம் சி எக்ஸ் தங்கத்திலும் விலை இறக்கம்

அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்று 51,280 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 494 ரூபாய் (0.95 %) விலை சரிந்து இருக்கிறது. கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 56,191 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானதுடன் ஒப்பிட்டால், இப்போது நல்ல விலை வீழ்ச்சியில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சரின் விலை, நேற்று 1,065 ரூபாய் (1.54 %) சரிந்து 67,926 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதே போல சென்னையில், 10 கிராம் ஆபரண வெள்ளியின் விலை 679.8 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

கடந்த 18 ஆகஸ்ட் 2020 அன்று 2,002 டாலர் வரை உச்சம் தொட்டு வர்த்தகமான, ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று 1,940 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த வாரம் முழுக்கவே, 1,932 முதல் 1,946 டாலருக்குள்ளேயே வர்த்தகமாகி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

300 பில்லியன் டாலர்

300 பில்லியன் டாலர்

அமெரிக்க செனட், ரிபப்ளிகன் கட்சி கொண்டு வந்த 300 பில்லியன் டாலர் கொரோனா வைரஸ் பொருளாதார ஸ்டிமுலஸ் பேக்கேஜை தடுத்து இருக்கிறது. டெமாக்ரட் கட்சியினர்களோ, ஸ்டிமுலஸ் பேக்கேஜிக்கு, இன்னும் கூடுதலாக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ஆக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தால் தங்கத்தின் விலை மேலும் உயரவே வழி வகுக்கும்.

ஜிடிபி & பணவீக்க தரவுகள்

ஜிடிபி & பணவீக்க தரவுகள்

தற்போது முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், இங்கிலாந்து நாட்டின் ஜிடிபி தரவுகள் மற்றும் அமெரிக்காவின் பணவீக்கம் தொடர்பான தரவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த தரவுகள் உலக பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவது பற்றிய ஒரு தெளிவான பார்வையைக் கொடுக்கும். ஒருவேளை இந்த தரவுகள் மோசமாக வந்தால், அது தங்கத்தின் விலை ஏற்றத்தை ஊக்குவிக்கும்.

பொருளாதார சிக்கல் & வட்டி விகிதம்

பொருளாதார சிக்கல் & வட்டி விகிதம்

பல நாட்டு மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கள் நாட்டு பொருளாதாரத்தில் பணத்தை உட்செலுத்துவது மற்றும் வட்டி விகிதங்களைக் குறைவாகவே வைத்திருப்பதால் 2020-ம் ஆண்டில், இதுவரை தங்கம் விலை சுமாராக 28 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. இப்போதைக்கு கொரோனா விரைவில் ஒழியும் என்றோ அல்லது பொருளாதாரம் விரைவில் பழைய நிலைக்கு வரும் என்றோ உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

எதிர் காலத்தில் தங்கம் விலை அதிகரிக்கலாம்.

எதிர் காலத்தில் தங்கம் விலை அதிகரிக்கலாம்.

அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை, பல நாட்டு அரசாங்கங்களும், மேற்கொண்டு வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எனவே மேலும் புதிய ஸ்டிமுலஸ் பேக்கேஜ்கள் மற்றும் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம். எனவே தங்கத்தின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price: Dealers are offering discounts to sell gold

The gold dealers are offering a good discount to sell their gold. this week they have been giving $30 discount for an ounce gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X