தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே உச்சத்திலேயே இருந்து வருகின்றது. குறிப்பாக சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு மேலாக காணப்படுகிறது.
இது கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவிலும் 1800 டாலர்களுக்கு மேலாக முடிவடைந்துள்ளது. இது மேற்கொண்டு வரும் வாரத்தில் அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் கமாடிட்டி சந்தைகள் என்பது இன்று விடுமுறை என்ற நிலையில் , இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது.
தங்கம் விலை ஏற்றம்
கடந்த வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது உச்சத்தில் காணப்பட்டது. இது அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவர் பேச்சு மற்றும் வேலை குறித்தான தரவானது வெளியான நிலையில், அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது நிச்சயம் அதிகரிக்கலாம் என்ற போக்கே தற்போது வரையில் நிலவி வருகின்றது.
டாலரின் மதிப்பு சரிவு
தொடர்ந்து டாலரின் மதிப்பானது சரிவடைந்து வந்த நிலையில், அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இதே போல வெள்ளி விலையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. பணவீக்கம் என்பது மெதுவாக குறையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் இலக்கினை எட்டவில்லை. ஆக இது மேற்கொண்டு வட்டி அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். அதேசமயம் மேற்கத்திய நாடுகள் ரெசசன் அச்சத்தினையும் எதிர்கொண்டு வருகின்றன.
பொருளாதார சரிவு
தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் தொடர்ந்து சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.பணவீக்கமும் வலுவாக இருந்து கொண்டுள்ள நிலையில், இதுவும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
வேலையின்மை அதிகரிப்பு
கடந்த அமர்வில் வெளியான அமெரிக்காவின் பே ரோல் தரவானது 263000 ஆக இருந்தது. இது கடந்த பிப்ரவரி 2021க்கு பிறகு குறைவான எண்ணிக்கையாகும். இது இன்னும் அமெரிக்க பொருளாதாரம் சரிவில் உள்ளதையே காட்டுகிறது. இன்னும் பணவீக்கத்தின் மத்தியில் வேலை உருவாக்கம் என்பது குறைவாகவே உள்ளது. தொடர்ந்து அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் என்பது 3.7% ஆகவே உள்ளது. அதேசமயம் பணவீக்க இலக்கு 2% என்ற நிலையில், அது இன்று வரையில் மேலாகவே காணப்படுகிறது.
இதே அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடானது அக்டோபரில் 7.7% ஆக இருந்தது. மொத்தத்தில் இது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை ஊக்குவிக்கலாம்.
விலை அதிகரிக்கலாம்
ஆக தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், அது மீண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.மொத்தத்தில் முந்தைய சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 1750 என்ற லெவலில் காணப்பட்டது. இது தற்போது 1800 டாலர்களை கடந்து நிபுணர்கள் கூறியதை போல காணப்படுகிறது. ஆக குறைந்த விலையில் வாங்கியவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகவும் இருந்திருக்கலாம்.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு, 4 ரூபாய் குறைந்து, 5016 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 40,128 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 5472 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து, 54,720 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 715.60 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 71,600 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!



Click it and Unblock the Notifications