தங்கம் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, ஓட்டுமொத்த நோக்கில் அதிகரித்தே காணப்படுகிறது. இது அவ்வப்போது சரிவினைக் கண்டு இருந்தாலும், மொத்தத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 15% மேலாக அதிகரித்தே காணப்படுகிறது.
இதற்கிடையில் பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலையும் உச்சம் தொட்டே காணப்படுகிறது.
தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை விகிதமானது வரலாறு காணாத உச்சத்தினை எட்டியுள்ளது.
விலை எப்படியிருக்கும்?
அவற்றில் குறிப்பாக திரவத் தங்கம் என்றழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது பலமான ஏற்றம் கண்டு வருகின்றது. இது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர். குறிப்பாக உக்ரைன் பிரச்சனையானது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கிறது.
தொடரும் தள்ளுபடி
இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலைக்கு மத்தியில், டீலர் தங்கத்திற்கான சலுகையினை தொடர்ந்து வருகின்றனர். இது தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது தேவை குறைய வழிவகுக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் குறைக்கப்பட்டு வருகின்றது. கடந்த வாரத்தில் தங்கம் விலைக்கு அதிகபட்சமாக அவுன்ஸுக்கு 77 டாலர்கள் வரை தள்ளுபடி வழங்கப்பட்ட நிலையில், நடப்பு வாரத்தில் 45 டாலர்களாக குறைந்துள்ளது என ராய்ட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன. எனினும் தள்ளுபடி தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
தள்ளுபடி ஏன்?
இந்தியாவில் தற்போது தங்கத்திற்காக இறக்குமதி வரி 10.75%+ ஜிஎஸ்டி வரி 3% என விதிக்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் சற்றே வேகமிழந்த தங்கம் விலையானது 10 கிராமுக்கு 51,475 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்தது. இதன் சமீபத்திய உச்சம் 55558 ரூபாயாகும். இதே வரலாற்று உச்சம் 56,200 ரூபாயாகும். தொடர்ந்து தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் தொடர்ந்து ஏற்றம் காணவே செய்கிறது. இதற்கிடையில் இதனுடன் இறக்குமதி வரி+ ஜிஎஸ்டி வரியும் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம். இதனால் தேவையானது குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் தள்ளுபடியானது தொடர்ந்து கொண்டுள்ளது.
ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமில்லை
கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் விலை பெரியளவில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், அது ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரியளவில் எதிரொலிக்கவில்லை எனலாம்.தொடர்ந்து தள்ளுபடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், விலையானது பெரியதாக அதிகரிக்கப்படவில்லை. எனினும் தற்போது கொடுக்கப்பட்ட தள்ளுபடியானது தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும்பட்சத்தில் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது. ஆக தேவையிருக்கும் பட்சத்தில் தங்கத்தினை வாங்கி வைக்கலாம்.
அதிகரிக்கலாம்
கடந்த வார தொடக்கத்தில் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டது, இது வட்டி அதிகரிப்பால், டாலர் மதிப்பு ஏற்றம், பத்திர சந்தை ஏற்றம் என பல காரணிகளுக்கு மத்தியில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்தது. ஆனால் தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா பதற்றம் அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில் அது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.
More From GoodReturns

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications