தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? நம் வீட்டு குழந்தை செல்வங்களை கூட ஆசையாய் தங்கம் என்று தான் கூப்பிடுகிறோம். அந்தளவுக்கு நம் உணர்வுகளில் கலந்துள்ள தங்கம் விலையானது கடந்த வாரத்தில் ஒரளவு சரிவினை கண்ட நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
இதனால் ஆபரணத் தங்கம் விலை குறையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் பல மாதங்களாகவே, இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வந்தன. தற்போது கொரோனாவின் தாக்கம் என்பது குறையத் தொடங்கியுள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
நிதி நெருக்கடி
இதனால் கடந்த ஆண்டில் தடைபட்டு போன முகூர்த்தங்கள் இந்த ஆண்டில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. எனினும் கொரோனாவின் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையினை இழந்து, அடிப்படை வாழ்வாதரங்களுக்கே கஷ்டப்பட்ட நிலையில், பலரும் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றனர்.
தேவை குறையலாம்
இன்னும் ஒரு சாரர் தற்போது கையில் பணப்புழக்கம் இருந்தாலும், ஆடி மாதம் என்பதால், தங்கம் வாங்குவதை குறைத்துள்ளனர். குறிப்பாக ஆடி மாதங்களில் முகூர்த்தம் எதுவும் இருக்காது என்பதால், தங்கத்திற்கான தேவை குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
ஏற்கனவே சரிவு
ஏற்கனவே நிதி நெருக்கடியால் தவித்து வரும் மக்கள் ஒரு புறம், தற்போது ஆடி மாதம் என்பதாலும் தங்கம் வாங்குவதை தவிர்த்து வரும் மக்கள் இப்படி பல வகையிலும் தங்கத்திற்காக தேவையானது குறைந்துள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையும் அதிகமாக இருந்து வருவதால், இது தங்கத்தின் தேவையை இதுவும் குறைத்துள்ளது.
தள்ளுபடி அதிகரிப்பு
இதற்கும் மத்தியில் தான் டீலர்கள் தங்கத்திற்கான தள்ளுபடியும் அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரங்களில் அவுன்ஸுக்கு 1.5 டாலர், அதன் பிறகு 5 டாலர்களாக இருந்த நிலையில், கடந்த வாரத்தில் 6 டாலர்கள் வரையில் அதிகரித்து கொடுக்கப்பட்டது.
இந்தியாவில் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் தங்கம் விலையுடன் 10.75% இறக்குமதி வரியும், அதனுடன் 3% ஜிஎஸ்டியும் சேரும்.
விலை குறையுமா?
சர்வதேச அளவில் டெல்டா வைரஸின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்ற நிலையில், நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தினை விலையும் அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகின்றது. இந்த நிலையில் தான் டீலர்கள் தள்ளுபடியை வழங்கி வருகின்றனர். இது தங்கத்தின் விலையை வரும் நாட்களில் குறைக்குமா? வாங்கலாமா?
More From GoodReturns

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!



Click it and Unblock the Notifications