இந்தியாவில் தங்கம் விலை இன்று ஹோலி பண்டிகை காரணமாக 44,000 ரூபாய்க்குக் கீழ் சரிந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவதற்கான சிறப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை சுமார் 160 ரூபாய் குறைந்து 43,760 ரூபாய்க்குச் சரிந்துள்ளது.
இதேபோல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 44,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, வெள்ளிக்கிழமை ரீடைல் வர்த்தகத்தில் இதன் விலை 44,920 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை தடுமாற்றம்
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் காரணத்தால் சிறு முதலீட்டாளர்களுக்கும், தங்கத்தைச் சேமிப்பாகப் பார்ப்பவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
18 சதவீதம் சரிவு
இந்தச் சூழ்நிலையில் கடந்த 6 மாதத்தில் தக்கம் விலை சுமார் 18 சதவீதம் சரிந்துள்ளது, அதாவது 10 கிராம் தங்கத்திற்குச் சுமார் 10,000 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
கொரோனா தொற்று
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வர்த்தகம், பொருளாதாரம் அனைத்தும் முடங்கியிருந்த வேளையில் 10 கிராம் தங்கத்தின் விலை 56,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த உச்ச விலையை ஒப்பிடுகையில் தற்போது விலை சுமார் 10,000 ரூபாய் குறைவாகவே உள்ளது.
உச்ச விலை
ஆனால் இந்த உச்ச விலையை மீண்டும் அடைய நீண்ட காலம் ஆகும் என்பது சந்தை வல்லுனர்களின் கணிப்பு, ஆகவே தங்கத்தின் மீது முதலீடு செய்யும் போது கடந்த 2 மாதம் தங்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கணித்துத் தங்கத்தை வாங்குவது சிறந்தது.
பெரு நகரங்களில் தங்கம் விலை
இன்று நாட்டின் பெரு நகரங்களில் தங்கம் விலை 44,000 ரூபாய்க்குக் கீழ் குறைந்திருந்தாலும், சிறு நகரங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து 44,000 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
ரீடைல் சந்தை விலை
இந்நிலையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை டெல்லியில் 43,850 ரூபாய்க்கும், சென்னையில் 42,160 ரூபாய்க்கும், மும்பையில் 43,760 ரூபாய்க்கும், பெங்களூரில் 43,460 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?



Click it and Unblock the Notifications