செளகார்பேட்டைக்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. பல வட நாட்டு மக்களும், தமிழர்களோடு தமிழர்களாக கலந்து வாழும் பகுதி. அப்பேற்பட்ட செளகார்பேட்டையை தன்னுள் கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தில், 10 கிராம் வெள்ளி விலை 627.50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸில், டிசம்பர் மாதத்துக்கான, 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சரின் விலை, 61,666 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எம் சி எக்ஸ் வெள்ளி விலை தன், ஆகஸ்ட் 2020 உச்ச விலையான 79,723 ரூபாயில் இருந்து 18,057 ரூபாய் விலை சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
வெள்ளி தான் இப்படி சகட்டு மேனிக்கு சரிந்து இருக்கிறது என்றால், தங்கம் விலையும், பெரிய வீழ்ச்சி கண்டு தடுமாறிக் கொண்டு இருக்கிறது. தங்கம் விலை என்ன ஆகும்? வாருங்கள் பார்க்கலாம்.

$1,894 - $,918 காத்திருக்கும் வர்த்தகர்கள்
தங்கம் எந்த பக்கம் வர்த்தகமாகும் என்கிற தெளிவு இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது என FX Street வலைதளம் சொல்கிறது. தங்கம் விலை, 1,918 டாலரை உடைத்துக் கொண்டு மேலே செல்லப் போகிறதா அல்லது 1,894 டாலரை உடைத்துக் கொண்டு கீழே செல்லப் போகிறதா? என வர்த்தகர்கள் காத்துக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறது.

ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்
சர்வதேச தங்கம் விலைக்கு (XAU USD) 1,913 டாலர் ஒரு பில்டராக செயல்படலாம் எனவும் குறிப்பிடுகிறது FX Street. தங்கம் விலை, 1,918 டாலரைக் கடந்த பின் 1,933 டாலரை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்கிறது FX Street வலைதளச் செய்திகள். கடந்த ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச தங்கம் விலை, அதிகபட்சமாக 2,063 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

சப்போர்ட் லெவல்கள்
ஒருவேளை, சர்வதேச தங்கம் விலை, மேலே சொன்னது போல 1,894 டாலருக்கு மேல் சரியத் தொடங்கினால், 1,890 மற்றும் 1,875 டாலருக்கு மத்தியில் நிறைய சப்போர்ட் இருப்பதாகச் சொல்கிறது FX Street. கடந்த 25 செப்டம்பர் 2020 அன்று சர்வதேச தங்கம் விலை 1,861 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. சரி இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்றைய தங்கம் விலை
ராயபுரம் கொண்ட சிங்காரச் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை 50,950 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு கிராம் விலை 5,095 ரூபாய். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை 46,700 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு கிராம் விலை 4,670 ரூபாய்.

₹8,180 சரிவு என்றால் பயங்கர வீழ்ச்சி தானே
நம் சென்னை மாநகரத்தில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம், கடந்த ஆகஸ்ட் 2020-ல் 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அந்த உச்ச விலையை, இன்றைய 50,950 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 8,180 ரூபாய் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

₹7,500 பெரிய விலை வீழ்ச்சி
அதே போல, சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த ஆகஸ்ட் 2020-ல் 54,200 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். அந்த உச்ச விலையை, இன்றைய 46,700 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 7,500 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

MCX தங்கம் விலை
இந்தியாவின் கமாடிட்டி சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), டிசம்பர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 50,687 ரூபாயில் இருந்து 154 ரூபாய் (0.30 %) விலை சரிந்து வர்த்தகமாகி வருகிறது.

தடுமாறும் இண்டர்நேஷனல் தங்கம் விலை
ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்றைய குளோசிங் விலையான 1,904 டாலரில் இருந்து 10 டாலர் (0.52 %) விலை சரிந்து 1,894 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 9 அக்டோபர் 2020 அன்று சர்வதேச தங்கம் விலை 1,930 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜியோஜித் கமாடிட்டி தலைவர் கணிப்பு
அமெரிக்க அரசு, அதிபர் தேர்தலுக்கு முன்பே ஸ்டிமுலஸ் பேக்கேஜை அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்கா சீனாவுக்கு இடயிலான தீர்கப்படாத பிரச்சனைகள் எல்லாம் தங்கம் விலையை அதிகம் இறங்க விடாமல் சப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் கம்பெனியின் கமாடிட்டி ரிசர்ச் தலைவர் ஹரீஷ் வி.

தங்கம் விலையை பாதிக்கும்
உலக பொருளாதாரம் மீள்வதற்கான நம்பிக்கை துளிர்த்துக் கொண்டு இருக்கிறது. தங்கத்தினை பாதுகாப்பான முதலீடாகப் பார்த்து பணத்தை முதலீடு செய்வது குறைந்தால், அது தங்கத்தின் விலையை பாதிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் கம்பெனியின் கமாடிட்டி ரிசர்ச் தலைவர் ஹரீஷ் வி.