அட்சய திருதியை பண்டிகை வருகிற ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் வேளையில் இந்தியாவில் தங்கம், வெள்ளி, வைரத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. பொதுவாகவே இந்தியாவில் மக்கள் தங்கம் வாங்குவது மிகவும் அதிகம், இந்த நிலையில் அட்சய திருதியை போன்ற பண்டிகை நாட்களில் தங்க நகை விற்பனை உச்சத்தை தொடும், அட்சய திருதியை நாளில் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் இதை தவிர்க்க மக்கள் தங்க நாணயங்களையும், தங்க பார்களையும் வாங்குவது வழக்கம்.
இந்த நிலையில் வியாழக்கிழமை சர்வதேச சந்தை வர்த்தகத்தில் பல்வேறு காரணத்திற்காக தங்கம் விலை குறைந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அட்சய திருதியை பண்டிகை தான். இந்த நாள் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படும் நிலையில் மக்கள் தங்கத்தை மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, மியூச்சவல் பண்ட், பெரிய தொகை கொண்ட இன்சூரன்ஸ் என பல முக்கிய திட்டங்களில் முதலீடு செய்கின்றனர், இதில் தங்கம் - வெள்ளி - வைரம் முக்கியமானதாக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே ரஷ்யாவின் உற்பத்தி குறைப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், OPEC அமைப்பின் 1.66 மில்லியன் பேரல் உற்பத்தி குறைப்புக்கு பின்பு கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்கு அதிகமாகவே உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணவீக்க பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் மீண்டும் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் தீவிரமாக உள்ளது. இதனால் பெருமளவு முதலீடுகள் தங்கத்தில் இருந்து பத்திர சந்தைக்கு மாறியுள்ளது.
இதனால் நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2004 டாலரில் இருந்து தடாலடியாக 1970 டாலர் வரையில் குறைந்து மீண்டும் 1994 டாலருக்கு உயர்ந்தது. இதை தொடர்ந்து இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை 1992 டாலராக கணிசமான சரிவை பதிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை சுமார் 510 ரூபாய் குறைந்து பல நாட்களுக்கு பின்பு 59,940 ரூபாயாக இருந்தது, ஆனாஸல் வர்த்தகம் முடியும் போது 60,450 ரூபாயாக மீண்டது. தங்கத்தை போல வெள்ளி விலை 920 ரூபாய் சரிந்து 74,680 ரூபாய் வரையில் குறைந்தது.
வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் தங்கம் விலை உயர்வுடன் துவங்கினாலும் தற்போது சர்வதேச சந்தை தாக்கத்தின் காரணமாக தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் சரிந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை 160 ரூபாய் குறைந்து 44,680 ரூபாய்க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 55850 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 220 ரூபாய் சரிந்து 60,930 ரூபாயாக உள்ளது. ஆனால் அடுத்த 2 நாட்களில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் வரலாம்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : சென்னை - 56,500 ரூபாய், மும்பை - 55,850 ரூபாய், டெல்லி - 56,000 ரூபாய், கொல்கத்தா - 55,850 ரூபாய், பெங்களூர் - 55,900 ரூபாய், ஹைதராபாத் - 55,850 ரூபாய், கேரளா - 55,850 ரூபாய், புனே - 55,850 ரூபாய், பரோடா - 55,900 ரூபாய், அகமதாபாத் - 55,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,000 ரூபாய், லக்னோ - 56,000 ரூபாய், கோயம்புத்தூர் - 56,500 ரூபாய், மதுரை - 56,500 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை: சென்னை - 45200 ரூபாய், மும்பை - 44680 ரூபாய், டெல்லி - 44800 ரூபாய், கொல்கத்தா - 44680 ரூபாய், பெங்களூர் - 44720 ரூபாய், ஹைதராபாத் - 44680 ரூபாய், கேரளா - 44680 ரூபாய், புனே - 44680 ரூபாய், பரோடா - 44720 ரூபாய், அகமதாபாத் - 44720 ரூபாய், ஜெய்ப்பூர் - 44800 ரூபாய், லக்னோ - 44800 ரூபாய், கோயம்புத்தூர் - 45200 ரூபாய், மதுரை - 45200 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : சென்னை - 61,640 ரூபாய், மும்பை - 60,930 ரூபாய், டெல்லி - 61,080 ரூபாய், கொல்கத்தா - 60,930 ரூபாய், பெங்களூர் - 60,980 ரூபாய், ஹைதராபாத் - 60,930 ரூபாய், கேரளா - 60,930 ரூபாய், புனே - 60,930 ரூபாய், பரோடா - 60,980 ரூபாய், அகமதாபாத் - 60,980 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,080 ரூபாய், லக்னோ - 61,080 ரூபாய், கோயம்புத்தூர் - 61,640 ரூபாய், மதுரை - 61,640 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : சென்னை - 81000 ரூபாய், மும்பை - 77400 ரூபாய், டெல்லி - 77400 ரூபாய், கொல்கத்தா - 77400 ரூபாய், பெங்களூர் - 81000 ரூபாய், ஹைதராபாத் - 81000 ரூபாய், கேரளா - 81000 ரூபாய், புனே - 77400 ரூபாய், பரோடா - 77400 ரூபாய், அகமதாபாத் - 77400 ரூபாய், ஜெய்ப்பூர் - 77400 ரூபாய், லக்னோ - 77400 ரூபாய், கோயம்புத்தூர் - 81000 ரூபாய், மதுரை - 81000 ரூபாய்.
More From GoodReturns

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications