பொசுக்கென சரிந்த தங்கம் விலை! ஏன் என்ன ஆச்சு தங்கத்துக்கு? அடுத்து என்ன ஆகும்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கம் விலை மெல்ல விலை ஏற்றம் கண்டு வருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், சென்னை ஆபரணத் தங்கம் விலை சுமாராக 62 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

ஆபரணத் தங்கம் விலை ஏற்றம் காண்பது ஒரு பக்கம் இருக்கட்டும், எம் சி எக்ஸ் & சர்வதேச தங்கம் விலை இன்று சரிந்து இருக்கிறது.

சென்னை ஆபரணத் தங்கம் விலை என்ன? மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் விலை என்ன? சர்வதேச அளவில் தங்கம் விலை என்ன? ஏன் தங்கம் விலை இன்று சரிந்து இருக்கிறது? தங்கம் விலை அடுத்து என்ன ஆகும்? என்பதற்கு எல்லாம் விடை காண்போம்.

MCX தங்கம் விலை என்ன ஆகும்?

MCX தங்கம் விலை என்ன ஆகும்?

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம் சி எக்ஸ்) தங்கம் விலை, நேற்று 51,333 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று 263 ரூபாய் (0.5 %) விலை இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதன் விலை என்ன ஆகும்?

51,500 வரைத் தொடலாம்

51,500 வரைத் தொடலாம்

ஏஞ்சல் புரோகிங் கம்பெனியின், கமாடிட்டி மற்றும் கரன்சி ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் அனுஜ் குப்தா, எம் சி எக்ஸ் தங்கம் விலை, குறுகிய காலத்தில் 51,500 வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறார். அதே போல எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கமாடிட்டி துணைத் தலைவர் ரவிந்திரா ராவும், எம் சி எக்ஸ் தங்கம் விலை, குறுகிய காலத்தில் 51,500 ரூபாயைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறார்.

XAU USD தங்கம் விலை

XAU USD தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று (21 அக்டோபர் 2020) 1,924 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 12 டாலர் (0.62 %) விலை சரிந்து 1,912 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சர்வதேச தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொடுமா?

$1,933 உடைத்தால் உச்சம் தான்

$1,933 உடைத்தால் உச்சம் தான்

சர்வதேச தங்கம் விலை, 1,933 டாலரை உடைத்துக் கொண்டு, மேல் நோக்கி வர்த்தகமானால், மீண்டும் தங்கம் ஏற்றப் பாதைக்கு வந்துவிட்டது எனலாம். அப்படி 1,933 டாலரைக் கடந்தால் விரைவில் 2,075 டாலரைத் தொடலாம் என்கிறது Daily FX வலைதளச் செய்திகள்.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை

வண்டலூர் பூங்கா கொண்ட சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை 51,490 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு கிராம் விலை 5,149. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 47,200 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு கிராம் விலை 4,720 ரூபாய்.

திடீர் விலை சரிவு ஏன்?

திடீர் விலை சரிவு ஏன்?

அமெரிக்க ஸ்டிமுலஸ் பேக்கேஜ் பேச்சுகள் ஊசலாடிக் கொண்டு தான் இருக்கின்றன. இதுவரை ஒரு சரியான தீர்வு கிடைக்கவில்லை. அது போக டாலர் இண்டெக்ஸ் வலுவடைந்து இருக்கிறது. எனவே தங்கம் விலை தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கிறது என பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தங்கத்தின் முதலீடுகள் சரிவு

தங்கத்தின் முதலீடுகள் சரிவு

உலகின் மிகப் பெரிய தங்க ட்ரஸ்டான SPDR Gold Trust-ன் தங்க கையிருப்பு, கடந்த அக்டோபர் 2020-ல் 1,277.94 டன்னாக இருந்தது. ஆனால் நேற்று (21 அக்டோபர் 2020) கணக்குப் படி 1,269.35 டன்னாகச் சரிந்து இருக்கிறது. ஆக தங்கத்தில் முதலீடுகள் சரிகிறது என்பதற்கு ஒரு பெரிய சாட்சி இது.

தங்கம் விலை அதிகரிக்கும் என பல கணிப்புகள்

தங்கம் விலை அதிகரிக்கும் என பல கணிப்புகள்

தாமஸ் கப்லன் (Thomas Kaplan), ஜிம் ராஜர்ஸ் (Jim Rogers) என தனி நபர்கள் தொடங்கி, க்ரெடிட் சூசி (Credit Suisse), கோல்ட் மேன் சாக்ஸ் (Goldman Sachs), பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America) என நிறுவனங்கள் வரை, பலரும், எதிர்காலத்தில் தங்கம் விலை சூப்பராக அதிகரிக்கும் எனச் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கணிப்புப் படி குறைந்த பட்சமாக தங்கம் விலை $2,300 முதல் அதிகபட்சமாக $5,000 வரை தங்கம் விலை ஏற்றம் காணலாம். எனவே எதிர்காலத்தில் நல்ல லாபம் பார்க்க இப்போது தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+