ஏறிய வேகத்தில் இறங்கிய ஆபரணத் தங்கம் விலை! பவுன் விலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 17 ஆகஸ்ட் 2020 அன்றே, ஆவணி மாதம் ஆரம்பமாகிவிட்டது. மீண்டும் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கத் தொடங்கும்.

தங்கம் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயரும், என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சில பல காரணங்களால், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை, கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது.

சரி நேற்றைக்கு ஆபரணத் தங்கம் விலை என்ன? நேற்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் சந்தையில் தங்கம் விலை என்ன ஆனது? சர்வதேச அளவில் தங்கம் என்ன விலையில் நிறைவடைந்தது? எனப் பார்ப்போம்.

ஆபரணத் தங்கம் விலை 24 கேரட்
 

ஆபரணத் தங்கம் விலை 24 கேரட்

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 53,720 ரூபாய்க்கு விற்றார்கள். 18 ஆகஸ்ட் 2020 அன்று 56,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது தங்கம். அதன் பிறகு தொடர்ந்து விலை இறக்கம் கண்டு வந்த தங்கம், 27 ஆகஸ்ட் 2020 அன்று மட்டும் ஒரு நல்ல விலை ஏற்றம் கண்டு 54,270 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் நேற்று (28 ஆகஸ்ட் 2020) அந்த விலை ஏற்றத்தில் பெரும்பகுதியை காலி செய்யும் விதத்தில் மீண்டும் விலை சரிந்து 53,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

பவுன் விலை என்ன 24 கேரட் ஆபரணத் தங்கம்

பவுன் விலை என்ன 24 கேரட் ஆபரணத் தங்கம்

07 ஆகஸ்ட் 2020 அன்று 59,130

18 ஆகஸ்ட் 2020 அன்று 56,360

26 ஆகஸ்ட் 2020 அன்று 53,660

27 ஆகஸ்ட் 2020 அன்று 54,270

28 ஆகஸ்ட் 2020 அன்று 53,720 என விலை மாற்றம் கண்டு இருக்கிறது, 24 கேரட் 10 கிராம் தங்கம். ஆக 28 ஆகஸ்ட் 2020 அன்று 24 கேரட் 1 பவுன் தங்கம் விலை 42,976 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை 22 கேரட்

ஆபரணத் தங்கம் விலை 22 கேரட்

வாழ்கை தேடி வந்தவர்களை வாழ வைக்கும் சென்னையில், 18 ஆகஸ்ட் 2020 அன்று 51,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது 22 கேரட் 10 கிராம் தங்கம். அதன் பிறகு தொடர்ந்து விலை இறக்கம் கண்டு வந்த தங்கம், 27 ஆகஸ்ட் 2020 அன்று மட்டும் ஒரு நல்ல விலை ஏற்றம் கண்டு 49,750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் நேற்று (28 ஆகஸ்ட் 2020) மீண்டும் விலை சரிந்து 49,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

பவுன் விலை என்ன 24 கேரட் ஆபரணத் தங்கம்
 

பவுன் விலை என்ன 24 கேரட் ஆபரணத் தங்கம்

07 ஆகஸ்ட் 2020 அன்று 54,200

18 ஆகஸ்ட் 2020 அன்று 51,670

26 ஆகஸ்ட் 2020 அன்று 49,190

27 ஆகஸ்ட் 2020 அன்று 49,750

28 ஆகஸ்ட் 2020 அன்று 49,240 என விலை மாற்றம் கண்டு இருக்கிறது 22 கேரட் 10 கிராம் தங்கம். ஆக 28 ஆகஸ்ட் 2020 அன்று 22 கேரட் 1 பவுன் தங்கம் விலை 39,392 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்திய எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் விலை

இந்திய எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் விலை

நேற்று (28 ஆகஸ்ட் 2020, வெள்ளிக்கிழமை), அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, 51,399 ரூபாயில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக 51,750 ரூபாய் வரை தொட்டது. இருப்பினும் இது 07 ஆகஸ்ட் 2020 உச்ச விலையான 56,191 ரூபாயை விட 4,792 ரூபாய் குறைவு.

வெள்ளி விலை - எம் சி எக்ஸ்

வெள்ளி விலை - எம் சி எக்ஸ்

இந்தியாவின் எம் சி எக்ஸ் சந்தையில், நேற்று (28 ஆகஸ்ட் 2020), செப்டம்பர் மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 66,149 ரூபாய்க்கு நிறைவடைந்து இருக்கிறது. 07 ஆகஸ்ட் 2020 அன்று இதே வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் உச்சவிலை 77,949 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. ஆக இப்போதும் எம் சி எக்ஸ் வெள்ளி தன் 07 ஆகஸ்ட் 2020 உச்ச விலையை விட 11,800 ரூபாய் குறைவாக வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

இண்டர்நேஷனல் தங்கம் விலை

இண்டர்நேஷனல் தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் நேற்று (28 ஆகஸ்ட் 2020) 1,964 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதிகபட்சமாக 1,973 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த 06 ஆகஸ்ட் 2020 அன்று உச்ச விலையாக, இதே சர்வதேச தங்கத்தின் விலை 2,075 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. ஆக 2075 - 1,964 = 111 அமெரிக்க டாலர் விலை குறைவாகவே வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

தங்கம் விலை போக்கு எப்படி இருக்கும்

தங்கம் விலை போக்கு எப்படி இருக்கும்

இந்தியாவில் வர்த்தகமாகும் எம் சி எக்ஸ் தங்கம் முதல் சர்வதேச சந்தையில் வர்த்தகமாகும் தங்கம் வரை எல்லாமே மெல்ல விலை ஏற்றம் காணத் தொடங்கிவிட்டன. பொருளாதாரங்கள் மெல்ல செயல்படத் தொடங்கி இருந்தாலும், பல நாட்டு மத்திய வங்கிகள் கணிசமாக கரன்சிகளை அச்சிட்டு, ஸ்டிமுலஸ் பேக்கேன் என்கிற பெயரில் வெளியிட இருப்பதால், மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price fall in chennai again on august 28 comparing to august 27

Chennai gold price fall on 28th August 2020 comparing to 27th August 2020. Still Chennai physical gold price is too low comparing to 07th August 2020.
Story first published: Saturday, August 29, 2020, 13:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X