சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்க பிரியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, பட்ஜெட் 2021ல் தங்கத்திற்கான இறக்குமதி வரியினை இந்திய அரசு குறைத்தது. இது தங்க ஆர்வலர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இது ஒரு புறம் தங்கம் விலை குறைய வழிவகுக்கும் என்றாலும், குறைந்த தங்கம் விலையானது அதிக மக்களை வாங்க தூண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கவே செய்யும். இதனால் தங்கத்தின் விலையானது பெரியளவில் குறையாத எனவும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இன்று இதெல்லாம் பார்க்கலாம்

இன்று இதெல்லாம் பார்க்கலாம்

அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? தங்கதிற்கு சாதகமான பாதகமான காரணிகள் என்னென்ன? இனி தங்கம் விலை என்னவாகும்? விலை குறையுமா? அதிகரிக்குமா? இனி விலை எப்படி இருக்கும். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

Comex தங்கம் விலை

Comex தங்கம் விலை

தொடர்ச்சியாக கடந்த நான்கு தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு தங்கம் விலையானது 6.40 டாலர்கள் குறைந்து, 1836.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையான 1834 டாலர்களை உடைத்தால் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comex வெள்ளி விலை

Comex வெள்ளி விலை

தங்கம் விலையினை விட, வெள்ளியின் விலை இன்று சற்றே அதிகமாகவே சரிந்துள்ளது எனலாம். சொல்லப்போனால் தற்போது அவுன்ஸூக்கு 0.71% குறைந்து 26.883 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் முந்தைய அமர்வின் முடிவு விலையை சற்று கீழாக தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னிலும் தங்கம் விலை சரிவதை போல தான் காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது 10 கிராமுக்கு 212 ரூபாய் குறைந்து, 47,801 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, கீழாக தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது குறையும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது கிலோவுக்கு 709 ரூபாய் குறைந்து, 68,217 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, சற்று கீழாக தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.

பத்திர லாபம் சரிவு

பத்திர லாபம் சரிவு

அமெரிக்காவின் பத்திர சந்தை சரிவினைக் கண்டு வந்தாலும், அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது எதிர்பார்த்தை விட பலமானதாக வந்துள்ளது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் சரியாமல் உள்ளது. இது தங்கம் விலையினை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் காணப்படுகிறது.

நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிப்பு

நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிப்பு

ஜனவரி மாதத்தில் அமெரிக்க நுகர்வோர் விலைகள் மிதமாக ஏற்றம் கண்டன. தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக ஒரு சிறந்த ஹெட்ஜிங் ஆக உள்ளது. இதனால் தங்கம் விலையானது கடந்த புதன் கிழமையன்று சற்று ஏற்றம் கண்டது. எனினும் ஊக்கத்தொகை எதிர்ப்பார்ப்புகள் தங்கம் விலை சரிவினைக் கட்டுக்குள் வைத்துள்ளன.

வேலை விகிதம் அதிகரிப்பு

வேலை விகிதம் அதிகரிப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், நீண்ட காலத்திற்கு பிறகு அமெரிக்காவின் வேலை சந்தை மீண்டுள்ளது என கூறியுள்ளார். இன்னும் வேலை வாய்ப்பினை அதிகரிக்க மானிட்டரி பாலிசியின் சப்போர்ட் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. இதனால் இப்போது வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் இருந்து சரிவு

உச்சத்தில் இருந்து சரிவு

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதியானது கடந்த ஆண்டினை காட்டிலும், 72% அதிகரித்துள்ளது. இது இனி வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராமுக்கு 8000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக குறைந்த விலையானது முதலீட்டாளார்களுக்கு வாங்க நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது.

Array

Array

தங்கம் விலையானது குறையும்பட்சத்தில், 47,800 - 47,550 ரூபாய் என்ற சப்போர்ட் லெவலை பார்க்கலாம். இதே ரெசிஸ்டன்ஸ் ஆக 48,300 - 48,580 ரூபாயாக இருக்கலாம்.

வெள்ளி விலையானது குறையும்பட்சத்தில், 68,200 - 67,700 ரூபாய் என்ற சப்போர்ட் லெவலை பார்க்கலாம். இதே ரெசிஸ்டன்ஸ் ஆக 69,500 - 70,400 ரூபாயாக இருக்கலாம்.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறையும் விதமாகவே காணப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்களை தூண்டலாம். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று குறைந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம். இதே நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றாலும், இன்னும் குறையும் போது வாங்கினால் இது தங்கம் வாங்க சரியான இடமாகத் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+