தங்கத்தின் விலையானது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே, பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. குறிப்பாக கடந்த ஆறு அமர்வுகளாகவே தொடர்ச்சியான சரிவினைக் கண்டு வருகின்றது.
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் சற்று சரிவினைக் கண்ட நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து நல்ல ஏற்றத்தினை கண்டு வந்தது. இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியது.
அதெல்லாம் சரி கடந்த வாரத்தில் தங்கம் விலை எப்படி இருந்தது? இனி வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? தற்போது வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலை அதிகரிக்கும்
தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,400 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது. இதே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 கிராமுக்கு 2000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வரும் நிலையில், இந்த விலை சரியான வாய்ப்பா? இங்கு வாங்கலாமா? என்பது பலரின் கேள்விகளாகவும் உள்ளது.
லாக்டவுன் தளர்வுகள்
தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பலவற்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிசிகல் தங்கத்திற்கான தேவையும் இனி வரும் வாரங்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்
தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது கடந்த வாரத்தில் வலுவடைந்துள்ளது. இது அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை 2023ல் இருமுறை அதிகரிக்கலாம் என்ற வெளியானதையடுத்து, டாலரின் மதிப்பு வலுவடைந்தது. இதனையடுத்தே தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டது.
பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும்
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, அமெரிக்கா வட்டி விகிதத்தினை குறைத்த நிலையில், இது இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற கேள்வி இருந்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பானது பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் என்றும், இது விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இது சந்தையை ஊக்குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு எதிராகவும் அமைந்துள்ளது.
COMEX தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினை கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 1879.60 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 1879.70 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சம் 1761.20 டாலர்களை தொட்டது. இதுவே இந்த வாரத்தின் குறைந்த விலையாகும். எனினும் முடிவில் 1764.30 டாலர்களாக முடிவுற்றது. வரும் வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.
COMEX வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் பலமான சரிவினையே கண்டது. வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமையன்று 28.095 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 28.160 டாலர்களை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 25.770 டாலர்களை தொட்ட நிலையில், முடிவில் 25.828 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையும் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நல்ல நேரமாகவே பார்க்கப்படுகிறது.
MCX தங்கம் விலை நிலவரம்
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் திங்கட்கிழமையன்று 10 கிராமுக்கு 48,750 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 48,750 ரூபாயினை தொட்டிருந்தது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகவும் இருந்தது. வெள்ளிகிழமையன்று குறைந்தபட்சம் 46,668 ரூபாயாக குறைந்து, 46,728 ரூபாயாக முடிவுற்றது. கடந்த வாரத்தில் மட்டும் 10 கிராம் தங்கம் விலை 2000 ரூபாய் சரிவில் காணப்பட்டது. இதே வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9400 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
MCX வெள்ளி விலை நிலவரம்
இந்திய சந்தையில் வெள்ளியின் விலை கடந்த திங்கட்கிழமையன்று, 72,000 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 72,094 ரூபாயினை தொட்டது. எனினும் குறைந்தபட்சமாக வெள்ளிக்கிழமையன்று 67,505 ரூபாயாகவும், முடிவில் 67,598 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தில் மட்டும் 4400 ரூபாய்க்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரமாகத் தான் பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் ஆறு நாட்கள் சரிவிலும், 1 நாள் மட்டும் ஏற்றம் கண்டும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று சற்று குறைந்து கிராமுக்கு 4429 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,432 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8,100 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் கடந்த வாரம் தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 49,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 48,290 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் சில தினங்கள் விலையில் பெரியளவில் மாற்றமில்லை என்றாலும், மற்ற நாட்களில் சரிவில் காணப்பட்டது. இன்று கிராமுக்கு மாற்றமில்லாமல் 73.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 731 ரூபாயாகவும், கிலோவுக்கு 73,100 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 76,500 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 73,100 ரூபாயாக உள்ளது.
நிபுணர்களின் கணிப்பு
தங்கம் விலையானது தற்போது சரிந்திருப்பது தற்காலிகம் தான். இது எப்போது வேண்டுமானாலும் விலையானது அதிகரிக்கலாம். வட்டி விகிதம் தற்போதைக்கு மாறாது என்பது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், பணவீக்கத்திற்கு இது வழிவகுக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகின்றது. ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆப்சனும் தங்கம் என்பதால், தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆக குறைந்த விலையானது வாங்க நல்ல வாய்ப்பு தான் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த இடத்தில் வாங்கலாமா?
அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும் போதும் 9,000 ரூபாய்க்கு மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பே என்றும் கணித்துள்ளனர். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!



Click it and Unblock the Notifications