இன்று தங்கம் விலை சரிவு.. இனி எப்படி இருக்கும்.. வாங்கலாமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே உச்சம் தொட்டு வந்த நிலையில், இது கடந்த 2 மாதத்தில் மட்டும் 10 கிராமுக்கு 5000 ரூபாய் ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் இன்று சற்று சரிய ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் பத்திர சந்தை சரிவானது கடந்த சில அமர்வுகளாக தங்கம் விலையில் ஒரு வலுவான மாற்றத்தினை ஏற்படுத்தியது. அதோடு வலுவான பொருளாதாரம் குறித்தான குறியீடுகளும், தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளன. இதனால் தான் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 5 மாத உயர்வான 1916.40 டாலர்களையும் எட்டியது.

RBI நாணய கொள்கை கூட்டம்.. வட்டி குறையுமா..? கடன் சலுகை கிடைக்குமா..? RBI நாணய கொள்கை கூட்டம்.. வட்டி குறையுமா..? கடன் சலுகை கிடைக்குமா..?

அதெல்லாம் சரி தற்போது தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 6.15 டாலர்கள் குறைந்து, 1898.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் ஒன்றாக உள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

வெள்ளியின் விலையானது தற்போது வரையில் மட்டும் 0.78% சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.217 டாலர்கள் குறைந்து, 27.885 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றாக உள்ளது. எனினும் நேற்றைய குறைந்த விலையினை உடைத்துக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ்-சில் தங்கம்

எம்சிஎக்ஸ்-சில் தங்கம்

எம்சிஎக்ஸ் சந்தையில் ஆகஸ்ட் காண்டிராக்டில் தற்போது 10 கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்து, 49,520 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் நீண்ட கால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையினை உடைக்கவில்லை. எப்படியிருப்பும் வரலாற்று உச்சத்தில் இருந்து சுமார் 7,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ்-சில் வெள்ளி

எம்சிஎக்ஸ்-சில் வெள்ளி

தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், வெள்ளியின் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 193 ரூபாய் குறைந்து, 72,055 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4,635 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 37,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரண தங்கம் விலையானது தொடர்ச்சியாக 4 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், தூய தங்கத்தின் விலையானது இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. தற்போது கிராமுக்கு 5,060 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,480 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 0.70 பைசா குறைந்து, 76.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 76,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையும் தொடர்ச்சியாக கடந்த 5 தினங்களாகவே ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

பத்திர லாபம் அதிகரிப்பு

பத்திர லாபம் அதிகரிப்பு

அமெரிக்காவின் பத்திர சந்தையானது ஒரே நாளில் ஒரு வாரத்தில் இல்லாத அளவு உச்சத்தினை தொட்டுள்ளது. அதிகப்படியான லாபம் என்பது, வட்டியில்லா முதலீடான தங்கத்தின் மீதான ஈர்ப்பினை குறைத்துள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்டுள்ளது.

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

தங்கம் வர்த்தகர்கள் அமெரிக்காவின் முக்கிய டேட்டாவான மே மாதத்தில் வேலையின்மை விகிதத்தினை பற்றி கண்கானித்து வருகின்றனர். ஆக இது தங்கம் விலையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தில் தற்போதைக்கு அதிகப்படியான முதலீடுகள் குறைந்துள்ளன எனலாம்.

Array

Array

பிரித்வி பின்மார்ட் நிறுவனத்தின் கமாடிட்டி ஆய்வாளர் மனோஜ் குமார் ஜெயின் அறிக்கையின் படி, தங்கத்தின் சப்போர்ட் லெவல்கள் 1894 - 1884 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1914 - 1933 டாலர்களாகவும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 27.88 - 27.55 டாலர்களாகும். ரெசிஸ்டன்ஸ் லெவல் 28.40 - 28.70 டாலர்களாகவும்.

இதே இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல்கள் 49,180 - 48,980 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,660 - 49,850 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 71,700 - 71,200 ரூபாயாகும். ரெசிஸ்டன்ஸ் லெவல் 73,300 - 73,800 ரூபாயாகும்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் எந்த காரணிகளும் மாறவில்லை. தற்போதைக்கு குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே செய்யும். பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது என நிபுணர்கள் கூருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price fall today, it’s down Rs.7000 from record high

Gold price updates.. Gold price fall today, it’s down Rs.7000 from record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X