செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது நடப்பு வாரம் தொடங்கி, கடந்த நான்கு தினங்களாக ஏற்றம் கண்டு வந்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவினை கண்டு வருகின்றது.

இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல விஷயமே. ஏனெனில் விலை குறைய ஆரம்பித்துள்ளது நல்ல விஷயம் எனில், தினசரி கேண்டில் பேட்டர்னில் இன்னும் குறைவது போல் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இன்னும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இன்னும் விலை குறைவது இருப்பதால், இன்னும் குறைந்த விலையில் தங்கத்தினை முதலீட்டாளர்கள் வாங்க முடியும். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

இதெல்லாம் பார்க்கவிருக்கிறோம்?

இதெல்லாம் பார்க்கவிருக்கிறோம்?

அதெல்லாம் சரி இன்று சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை என்ன? இனி குறையுமா? எவ்வளவு குறையலாம்? தங்கத்திற்கு சாதகமான பாதகமான காரணிகள் என்னென்ன? அடுத்து என்ன செய்யலாம். தற்போது வாங்கலாமா? வேண்டாமா? நீண்டகால நோக்கில் என்ன செய்வது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை எவ்வளவு?

காமெக்ஸ் தங்கம் விலை எவ்வளவு?

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் வாரத்தின் இறுதி நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் காணும் விதமாக குறைந்து வருகின்றது. இது பெரியளவில் சரிவினைக் காணாவிட்டாலும், இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவுன்ஸூக்கு 4 டாலர்கள் குறைந்து, 1861.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை எவ்வளவு?

காமெக்ஸ் வெள்ளி விலை எவ்வளவு?

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளி விலையும் கிட்டதட்ட 1% சரிந்து காணப்படுகிறது. இது இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது. இது தற்போது 0.92% குறைந்து, 25.617 டாலராக காணப்படுகிறது. நேற்றைய குறைந்த பட்ச விலையினை உடைத்து காட்டியுள்ள நிலையில், வெள்ளி விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை எவ்வளவு?

எம்சிஎக்ஸ் தங்கம் விலை எவ்வளவு?

இந்திய வர்த்தகத்தினை பொறுத்த வரையில் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இருப்பதால், தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 72 ரூபாய் குறைந்து, 49,376 ரூபாயாக காணப்படுகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்தவரையில் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று கீழாக தொடங்கியுள்ளதோடு, நேற்றைய குறைந்தபட்ச விலையும் உடைத்துக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை எவ்வளவு?

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை எவ்வளவு?

வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தினசரி கேண்டில் பேட்டர்னில் டோஜி பார்ம் ஆகியுள்ளது. அதோடு இந்த டோஜியின் குறைந்தபட்ச விலையையும் உடைத்து காட்டியுள்ளது. இதனால் வெள்ளி விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 560 ரூபாய் குறைந்து, 66,741 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இது கடந்த சில வர்த்தக அமர்வுகளாக சற்று சரிவினைக் கண்டு வந்த அமெரிக்க பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கம் விலையானது, இன்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

மற்ற விலையுயர்ந்த உலோகங்களின் விலையும் சரிவுதான்

மற்ற விலையுயர்ந்த உலோகங்களின் விலையும் சரிவுதான்

தங்கம் மற்றும் அல்ல மற்ற விலையுயர்ந்த உலோகங்களான வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட உலோகங்களின் விலையும் அழுத்தத்தினை காணத் தொடங்கியுள்ளது. ஏனெனில் வட்டியில்லா முதலீடான தங்கம் உள்ளிட்ட உலோகங்களுடன் ஒப்பிடும்போது, வட்டியுடன் லாபம் கொடுக்கும் பத்திர சந்தையின் பக்கம் முதலீட்டாளர்களை ஈர்க்க தொடங்கியுள்ளது. இது புல்லியன் சந்தையில் அழுத்ததினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்கா ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினை மீட்டெடுக்க விரைவில், ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல், இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கு ஆதரவளிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

அதாவது இது மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வழிவகுக்கும். இதனால் பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் நோக்கி செல்லலாம். இதன் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தின் பக்கம் திரும்பலாம். இதற்கிடையில் தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் விகிதம் 1800 டாலர்கள் எனவும், ஒரு வேளை 1885 டாலர்களை உடைத்து காட்டினால் இந்த விகிதம் மாறலாம். எனினும் தங்கம் விலையானது சரியும் விதமாக காணப்படுகிறது. அப்ப்டி சரியும் பட்சத்தில் 1770 டாலர்களைக் கூட தொட வாய்ப்புள்ளது.

மிகப்பெரிய ஊக்கத்தொகை வேண்டும்

மிகப்பெரிய ஊக்கத்தொகை வேண்டும்

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில், அது தேவையினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆசிய சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றது. அதோடு அதிகரித்து வரும் இந்த கொரோனாவில் இருந்து பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மிகப்பெரிய தொகையினை ஊக்கத்தொகையாக அறிவிக்கபப்ட வேண்டும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தங்கத்தில் புராபிட் புக்கிங்

தங்கத்தில் புராபிட் புக்கிங்

தங்கம் விலையானது கடந்த நான்கு அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று புராபிட் புக்கிங் காரணமாக சரிந்து வருகின்றது. எனினும் தினசரி பேட்டர்னில் செல்லிங் அழுத்தம் காணப்படுவதாலும், சில காரணிகள் காரணமாக தங்கம் விலை குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளார்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price fall today, silver rates also slump

Gold price updates.. Gold price fall today, silver rates also slump
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X