தங்கம் விலை: கடந்த வாரம் 5% சரிந்த தங்கம்..! இந்த வாரம் என்ன ஆகும்? ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா?

மிடில் கிளாஸ் மக்கள் மற்றும் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை, தற்போது பெருமளவு குறைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 16,800 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதாவது ஒரு சவரன் 1,34,400 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதன் பின்னர் விலை படிப்படியாக குறைந்து இன்று ஒரு கிராம் தங்கம் 12,615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை: கடந்த வாரம் 5% சரிந்த தங்கம்..! இந்த வாரம் என்ன ஆகும்? ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா?

வரலாற்று உச்சபட்ச விலையுடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 4,185 ரூபாய் அதாவது சுமார் 24.9% குறைந்துள்ளது. அதுவே ஒரு சவரன் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து சுமார் 33,480 ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை தாறுமாறாக குறைந்துள்ளது.

கடந்த வாரம் திங்கள்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து வர்த்தக நாட்களிலுமே தங்கம் விலை சரிவில் தான் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 640 ரூபாயும் ஒரு சவரனுக்கு 5,120 ரூபாயும் குறைந்துள்ளது. அதாவது ஒரே வாரத்தில் தங்கம் விலை 4.83% சரிந்துள்ளது.

Also Read

இந்நிலையில் தான் தங்கம் விலை இந்த வாரமும் சரியுமா ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் செல்லுமா என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சந்தை நிபுணர்களின் கணிப்புப்படி, வரும் வாரத்தில் தங்கம் விலையில் லேசான ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பெரும்பாலும் விலை சரியவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்கத் தரவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால் மேலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது, இதனால் முதலீட்டாள்ர்கள் வட்டி வருமானம் தரும் முதலீடுகளை நோக்கி செல்கின்றனர். எனவே தங்கத்தின் டிமாண்ட் குறைந்து விலையும் சரிகிறது.

Recommended For You

இருந்தாலும் ஈரான் போர், உள்நாட்டில் திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலத் தேவைகள் இருப்பதால், விலை மிகப்பெரிய அளவில் அதலபாதாளத்திற்கு செல்லாமல் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் அதாவது ஒரு சவரன் ரூ.98,000 வரை சரிந்து நிலைபெற வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர். எனவே தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், ஒரேயடியாக மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யாமல், இந்த வாரம் விலை குறையும் நாட்களில் சிறுக சிறுக வாங்குவது பாதுகாப்பான முடிவாக இருக்கும் என கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+