Gold: தங்கம் விலையானது இன்று சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சற்று சரிவில் காணப்படுகின்றது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில் கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி ஆகியுள்ள நிலையில், ரோலோவர், புராபிட் புக்கிங் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.
இதே சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது சரிவில் தான் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் பண்ணை அல்லாத வேலை குறித்தான தரவானது ஏப்ரல் 7 அன்று வெளியாகவுள்ளது. இதன் காரணமாக இதன் தாக்கம் சந்தையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் தங்கம் விலையானது வரலாறு காணாத ஏற்றத்தினை கண்டுள்ள நிலையில், இது மேற்கொண்டு தங்கத்தில் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யத் தொடங்கியிருக்கலாம். இதன் காரணமாக தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம்.

எப்படியிருப்பினும் இன்று சற்று சரிவில் காணப்பட்டாலும், தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. இது பங்கு சந்தையில் முதலீட்டினை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் மற்றும் வெள்ளியில் பெரியளவில் முதலீடுகள் செய்யப்படவில்லை.
தொடர்ந்து பொருளாதாரமானது மந்த நிலையில் இருந்து வரும் நிலையில் தங்கம் விலையானது 2075 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையில் 60,330 - 61,280 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4 டாலர்கள் குறைந்து, 2031.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே வெள்ளி விலை சற்று குறைந்து, 25.032 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் பியூச்சர் சந்தையில் 10 கிராமுக்கு, 136 ரூபாய் குறைந்து, 60,720 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே வெள்ளி விலை இன்று கிலோவுக்கு 18 ரூபாய் குறைந்து, 74,517 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 5650 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 45,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 43 ரூபாய் குறைந்து, 6,164 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 430 ரூபாய் குறைந்து, 61,640 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலையும் கிராமுக்கு 70 பைசா குறைந்து, 80 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 80,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications