தங்கம் விலை தனது ஆகஸ்ட் மாத உச்ச நிலையில் இருந்து 15 சதவீதம் சரிந்துள்ளது, கொரோனா பாதிப்பு, முதலீட்டுச் சந்தை என வர்த்தகப் பாதிப்புகளைக் கடந்து உலக நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தங்கத்தைத் தொடர்ந்து 2021ல் வாங்கலாமா..? அல்லது கையில் இருக்கும் தங்க முதலீட்டை மட்டுமே வைத்துக்கொண்டு, சிறப்பான வர்த்தகச் சூழ்நிலைக்குக் காத்திருக்க வேண்டுமா? என்ற கேள்விகளுக்குப் பதில் இப்போது பார்க்கலாம்.
தங்க முதலீட்டுச் சந்தை நிபுணர்களின் கருத்தின் படி தங்கத்தில் தற்போது முதலீடு செய்தால் லாபம் அடைய நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். குறுகிய காலத்தில் லாபம் பெற திட்டமிடுவோர் காத்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
முகேஷ் அம்பானி வெளியேற்றம்.. உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவு.. காரணம் இதுதான்..!

தங்கத்தை விற்பனை செய்யும் முதலீட்டாளர்கள்
பல முதலீட்டாளர்கள் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவின் மூலம் புத்தாண்டின் போது சந்தையில் தங்கத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் பல காரணிகள் இருக்கும், காரணத்தால் தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் நிலை என்ன..? தங்கம் விலை எந்தக் காரணிகளால் அதிகளவில் பாதிக்கப்படும் என்பதைப் பார்ப்போம்.

2020ல் தங்கம் எப்படி இருந்தது
இந்திய ரீடைல் சந்தையில் இந்த வருடம் அதிகப்படியாக 10 கிராம் தங்கம் 55,900 ரூபாய் முதல் 56,000 ரூபாய் அளவீட்டில் விற்பனை செய்யப்பட்டது. 4 வருடத்திற்கு முன் 25,000 ரூபாய் அளவில் இருந்து தங்கம் விலை தற்போது 100 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது, இந்த 4 வருட காலத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 25,000 அளவில் இருந்து 56,000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

37-38 சதவீதம் லாபம்
இந்த வருடம் மட்டும் தங்கம் மீதான முதலீட்டுக்கு சுமார் 37-38 சதவீதம் லாபத்தைக் கொடுத்துள்ளது. 2020ல் 10 கிராம் தங்கம் விலை 40,000 ரூபாய் அளவீட்டில் இருந்து அதிகப்படியாக 56,000 ரூபாய் அளவீட்டையும், தற்போது 49,200 ரூபாய் அளவிலும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து உலகின் பல நாடுகளில் அடுத்த சில மாதங்களில் வரும் காரணத்தால் தங்கம் விலை பெரிய அளவில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கான மருந்து 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் பெரும்பாலான நாடுகளுக்கு அதிகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்கம் விலை 8 முதல் 10 சதவீதம் வரையில் குறையும். இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் தங்கம் மீது அதிகளவில் முதலீடு செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம்.

நீண்ட கால முதலீடு
இதேவேளையில் உலக நாடுகளின் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் தங்கம் விலையில் தற்போதைய உச்ச விலையான 56,000 ரூபாய் அளவை அடைவது குறுகிய கால முதலீட்டில் நடக்காது. எனவே முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டுக்குத் தயாரான பின்பு தங்கத்தில் முதலீடு செய்யத் தயாராகுங்கள்.

அமெரிக்கச் சந்தை
அமெரிக்காவின் இந்த 900 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்கத் திட்டம் அமெரிக்கக் குடும்பங்கள் மற்றும் வர்த்தகங்களைக் கொரோனா பாதிப்பில் இருந்து பெரிய அளவில் மீட்டு எடுக்க முடியும். இத நடக்கும் பட்சத்தில் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து சரிவைத் தழுவும். இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் மீது குறுகிய கால முதலீட்டுக்கும் சரி நீண்ட கால முதலீட்டுக்கும் சரி சரியான கணிப்பை அளிக்க முடியாமல் உள்ளனர்.

பிரிட்டன் பாதிப்புகள்
உலகிலேயே முதல் நாடாக அனைத்துத் தரப்பு ஒப்புதல்களையும் பெற்று பிரிட்டன் அரசு கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரிட்டன் விமானங்கள், பிரிட்டன் விமானப் பயணிகள் வருவதற்குத் தடை விதித்துள்ளது.

பிரிட்டன் கொரோனா எதிரொலி
பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக ஐரோப்பா மொத்தமும் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படும் அளவிற்குத் தற்போது சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்த விமானப் பயணிகளில் பலருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பீதி அதிகரித்துள்ளது.
இதனால் முதலீட்டுச் சந்தை பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.