அமெரிக்க நாணய கொள்கை முடிவுகள் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாகத் தங்க முதலீட்டுச் சந்தையில் அதிகளவிலான சரிவை உருவாக்கியது. இதனால் பல மாதங்களுக்குப் பின் இந்தியாவில் தங்கம் விலை 48000 ரூபாய் அளவீட்டுக்குக் கீழ் இறங்கியது.
இதன் மூலம் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தைச் சேமிப்புக்காகவும், எதிர்காலத்தில் கல்வி, திருமணம் போன்ற பல முக்கியமான காரியங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் வாங்கச் சிறந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
தங்கம் விலை இன்று சரிய மிக முக்கியமான காரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடர்ல் ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் தான்.
அப்படி என்ன சொன்னாங்க..? விலை எவ்வளவு குறைந்துள்ளது..?
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகள் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பில் அமெரிக்கா மீண்டு வரும் நிலையில் பணவீக்கம் முக்கியப் பிரச்சனையாக விளங்கி வருகிறது. இதைச் சமாளிக்க அமெரிக்க அரசும், பெடரல் வங்கிகளும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
நாணய கொள்கை கூட்டம்
இதற்கு ஏற்றார் போல் புதன்கிழமை நடந்து முடிந்த நாணய கொள்கை கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை 2023ஆம் ஆண்டில் உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 2024ல் உயர்த்துவதாக அறிவித்திருந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே வட்டியை உயர்த்த உள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
வட்டி விகிதம் அளவீடு
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தற்போது வட்டி விகிதத்தை 0.25 சதவீதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை. இதேபோல் ஒவ்வொரு மாதமும் 120 பில்லியன் டாலருக்குச் சொத்துக்களை வாங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
முதலீட்டுச் சந்தையில் மாற்றங்கள்
பெடர்ல் ரிசர்வ் வங்கி அறிவிப்பு மூலம் டாலர் மதிப்பு அதிகரித்துள்ளது, 10 வருட பத்திர முதலீட்டின் மீதான லாபம் அதிகரித்துள்ளது. இதனால் இனி வரும் காலத்திலும் பத்திர சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிய அதிக வாய்ப்புகள் உள்ளது.
தடம்புரண்ட பங்குச்சந்தை
இதன் வாயிலாக அமெரிக்கப் பங்குச்சந்தை அதிகளவிலான சரிவையும், இன்று காலை ஆசியச் சந்தையில் சீனா, ஹாங்காங் ஆகிய சந்தைகள் தவிர அனைத்து சந்தைகளும் சரிவைச் சந்தித்தது. அமெரிக்கா மற்றும் ஆசியச் சந்தையின் வீழ்ச்சியில் எதிரொலி இந்தியச் சந்தையில் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தை தங்கம் விலை
பெட்ரல் ரிசர்வ் வங்கி அறிவிப்பு, பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் ஆகியவை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1860 டாலரில் இருந்து 1811 டாலர் வரையில் குறைந்துள்ளது. ஆசிய சந்தை வர்த்தகத் துவக்கத்தில் இதன் விலை 1820 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை
புதன்கிழமை இரவு பெட்ரல் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியான நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை தற்போது சுமார் 40 டாலர் ஓரே நாளில் குறைந்து 1860 டாலரில் இருந்து 1820 டாலராகக் குறைந்துள்ளது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இதன் எதிரொலியாக வியாழக்கிழமை காலை எம்சிஎக்ஸ் வர்த்தகச் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.52 சதவீதம் குறைந்து 47,768 ரூபாயாகக் குறைந்துள்ளது. பல மாதங்களுக்குப் பின் தங்கம் விலை 47000 ரூபாய் அளவீட்டுக்குக் குறைந்துள்ளது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
இதேபோல் எம்சிஎக்ஸ் வர்த்தகச் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை 1.55 சதவீதம் வரையில் சரிந்து 70,357 ரூபாய்க்கு சரிந்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் 71000 ரூபாய் அளவீட்டை நீண்ட நாட்களுக்குப் பின்பு இழந்து 70000 ரூபாய் அளவீட்டிற்குக் குறைந்துள்ளது.
டாலர் - ரூபாய் மதிப்பு
இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 73.29 ரூபாயில் இருந்து 73.82 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!



Click it and Unblock the Notifications