இந்தியாவில் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால் சாமானிய மக்கள் சேமிப்பிற்காகவும், திருமணம் போன்ற பல முக்கியமான நிகழ்வுகளுக்கும் தங்கம் வாங்க முடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பும் அதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் வாயிலாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது முதலீட்டாளர்கள் அதிகம் கவனித்துக்கொண்டு இருந்த அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் சந்தைக்குச் சாதகமாக இருந்த காரணத்தால் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்த முதலீடுகள் அதிகப்படியாகப் பங்குச்சந்தைக்குத் தாவி வருகிறது.
இதன் எதிரொலியாகத் தமிழ் குட்ரிட்டன்ஸ் ஏற்கனவே கணித்தது போன்று தங்கம் விலை இன்று பெரிய அளவில் குறைந்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பு
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் நேற்று வெளியிட்டுள்ள செய்திகளில் புல்லியன் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றி வரும் காரணத்தால் சாமானிய மக்கள் மீண்டும் தங்கம் வாங்க ஒரு அற்புதமான வாய்ப்பு உருவாக உள்ளது எனக் கணித்திருந்தோம்.
எம்சிஎக்ஸ் சந்தை
இதன் படி இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் கணிக்கப்பட்ட அளவை விடவும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்றைய விலை சரிவை பயன்படுத்துவோருக்கு பெரும் லாபம் கிடைக்க உள்ளது என்றால் மிகையில்லை.
தங்கம் விலை
இன்றைய MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத அளவிற்குச் சுமார் 1.33 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் 10 கிராம் தங்கம் விலை தனது 49000 அளவீட்டில் இருந்து 48,255 ரூபாய்க்கு குறைந்துள்ளது.
625 ரூபாய் சரிவு
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.65 சதவீதம் வரையில் சரிந்து 48,880 ரூபாய்க்குக் குறைந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும் 625 ரூபாய்க் குறைந்தது. அதாவது ஒரு கிராம் தங்கம் விலை 62 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளி விலை
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை இன்று 1.39 சதவீதம் சரிந்து 71,223 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இந்திய சந்தையில் தங்கமும், வெள்ளியும் குறைவதற்கு மிக முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் நடத்துள்ள பெரும் மாற்றம் தான்.
அமெரிக்காவின் பணவீக்கம் தரவுகள்
அமெரிக்காவின் பணவீக்கம் தரவுகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும் கணிசமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும், இதுவும் இந்தப் பாதிப்பு தற்காலிகமானது மட்டுமே என்று அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பங்குசந்தை
இந்த அறிவிப்பு வெளியான முதல் அமெரிக்கப் பங்குச்சந்தை மிகவும் லாபகரமாக மாறியுள்ளது. ஒரு பக்கம் பத்திர சந்தையிலும் வலிமை அடைந்து வருகிறது, இன்னொரு பக்கம் பங்குச்சந்தையும் லாபகரமாக மாறி வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தங்கம் மீதான முதலீடு எதற்கு..?
பங்குச்சந்தை, பத்திர சந்தை, கச்சா எண்ணெய் சந்தை
பொதுவாகப் பெரும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, பத்திர சந்தை, கச்சா எண்ணெய் சந்தை ஆகியவற்றில் ஏற்படும் தடுமாற்றங்களைச் சமாளிப்பதற்காகத் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். தற்போது இந்த மூன்றும் சிறப்பான வளர்ச்சியில் இருக்கும் காரணத்தால் தங்கம் மீதான முதலீடு தேவையற்றதாக உள்ளது.
சர்வதேச தங்கம் விலை
இதன் விளைவு சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றம், தங்கம் விலை சரிவு. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1902 டாலராக இருந்த நிலையில், இன்று 1847 டாலராகக் குறைந்துள்ளது.
55 டாலர் குறைந்தது
ஆதாவது வெறும் 2 வர்த்தக நாளில் மட்டும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 55 டாலர் குறைந்துள்ளது. இதன் மூலமாகவே இந்தியாவில் தங்கம் விலை 48,288 ரூபாய் வரையில் சரிந்தது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று சரிந்துள்ளது.
அமெரிக்க டாலர் - இந்திய ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 73.24 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு உயர்ந்திருந்தால் கட்டாயம் இந்திய ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை சற்று கூடுதலாகவே குறைந்திருக்கும். இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யும் முக்கியமான காரணிகளில் ரூபாய் மதிப்பும் ஒன்று.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications