மும்பை: தங்கம் விலையானது கடந்த வாரத்தில் கடைசி சில வர்த்தக தினங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த சரிவானது இனியும் தொடருமா? இந்த இடத்தில் வாங்கலாமா? அல்லது இன்னும் குறையுமா? நீண்டகால நோக்கில் வாங்கலாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?
தங்கம் விலையானது ஓவர் பாட் லெவலில் இருந்த நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தை ஏற்றம் என பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
குறைந்த விலை
இதற்கிடையில் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வந்த தங்கம் விலையால், புராபிட் காரணமாக மீண்டும் சரிவினை காண ஆரம்பித்துள்ளது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 56,780 ரூபாயாக இருந்தது.
தங்கத்தின் 52 வார உச்ச விலையானது 58,847 ரூபாயாகவும், இதே சர்வதேச சந்தையில் 2000 டாலர்களையும் எட்டிய நிலையில், தற்போது 1865 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது இன்ட்ராடேவில் 1852 டாலர்களை எட்டியது.
வெள்ளி விலையும் சரிவு
வெள்ளி விலையும் அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இதுவும் கடந்த வாரத்தில் ஒரு சதவீதம் குறைந்தும் காணப்பட்டது. சந்தை நிபுணர்கள் அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் மற்றும் அமெரிக்காவின் பத்திர சந்தை என சில காரணிகளுக்கு மத்தியில், மீண்டும் வரும் நாட்களில் ஏற்றம் காண ஆரம்பிக்கலாம்.
டாலரின் மதிப்பு
டாலரின் மதிப்பானது 103 டாலர்களுக்கு கீழாக குறையும்போது தங்கம் விலையானது மீண்டும் ஏற்றத்திற்கு திரும்பலாம். இந்த காலகட்டத்தில் தங்கத்தினை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆக இந்த காலகட்டத்தில் ஷார்ட் பொசிசன் எடுப்பதை தவிர்க்கலாம். கடந்த வெள்ளிக்கிழமையன்றே டாலரின் மதிப்பானது 103-க்கும் கீழாக காணப்பட்டது.
ரூபாய் மதிப்பு
ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் இது வரும் நாட்களிலும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
அமெரிக்காவின் மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை தொடர்ந்து பணவீக்கத்தினை குறைக்கும்பொருட்டு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், பல காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றன.
தீபாவளிக்கு பிறகு
தீபாவளிக்கு பிந்தைய விலைமதிப்பற்ற உலோகம் விலையானது தொடர்ந்து, வட்டி அதிகரிப்புக்கு மத்தியிலும் கூட அதிகரித்து வருகின்றது. இது பொருளாதார மந்த நிலை அச்சம் உள்ளிட்ட சில காரணிகளுக்கு மத்தியில், தங்கம் விலையை ஆதரிக்கிறது.
மத்திய வங்கிகள்
ஐரோப்பிய வங்கிகள் தங்கம் விற்பனையை நிறுத்தியுள்ளன. ரஷ்யா மற்றும் துருக்கி, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் வாங்கி வருகின்றன. மத்திய வங்கிகள் தொடர்ந்து அதிகளவில் தங்கத்தினை வாங்கி குவித்து வருகின்றன. இது மற்ற பத்திரங்கள் மற்றும் கரன்சிகளை போல் அல்லாமல் பாதுகாப்பு புகலிடமாக உள்ளது. இது எந்த விற்பனையாளரையும், அரசினையும் சார்ந்து இல்லை.
வாங்கலாம்
ஆக தங்கம் விலையானது குறையும்பட்சத்தில் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். இதனை 56,600 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலையானது 57,000 ரூபாய் மற்றும் 57,100 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதே டாலரின் முக்கிய சப்போர்ட் ஆல 1835 டாலராகவும், இதே 1890 டாலர்களை உடைத்தால், 1920 டாலர்கள் வரையில் செல்லலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?



Click it and Unblock the Notifications