சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பல்வேறு வர்த்தக மாற்றங்களின் எதிரொலியாக இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், நடுத்தர மக்கள் சேமிப்பிற்காகத் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் வாயிலாக நகை கடைகளில் மக்கள் கூட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சில தடுமாற்றத்தைச் சந்தித்துள்ள வேளையில் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சரிந்தது
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள வலிமையான நிலை மற்றும் சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு உள்ள அதிகப்படியான தங்கம் ஆகியவற்றின் காரணமாகத் தங்கம் விலை இன்று சரிந்துள்ளதாக ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
MCX சந்தை நிலவரம்
இந்நிலையில் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.37 சதவீதம் சரிந்து 44,530 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை இன்று கணிசமான அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி விலை 0.10 சதவீதம் உயர்ந்து 64,932 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்
மேலும் ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கணிசமான சரிந்துள்ளது. 10 கிராம் தூய தங்கத்தின் விலை இன்றைய வர்த்தகத்தில் சுமார் 147 ரூபாய் சரிந்து 44,081 ரூபாய் அளவீட்டில் ரீடைல் மற்றும் கமாடிட்டி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தைப் போல் அல்லாமல் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது, வியாழக்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோ வெள்ளியின் விலை 63,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இதன் விலை சுமார் 1,036 ரூபாய் அளவிற்கு உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 64,276 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதல் மந்தமாகவே இருந்த காரணத்தால் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றும் ஏதும் இல்லை. இதனால் ஒரு அவுன்ஸ் தங்கம் இன்று அதிகப்படியாக 1,732 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி மாலை 5.30 மணியளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,722.35 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு
மேலும் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அதிகளவிலான மாற்றத்தை எதிர்கொண்டது. நேற்றைய வர்த்தகத்தில் 72.60 ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்ட டாலர் இன்று 72.37 வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரையில் இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா..?
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,848 ரூபாய்
- 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,000 ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 69,500 ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,790 ரூபாய்
- 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,000 ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 69,500 ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,790 ரூபாய்
- 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,000 ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 69,500 ரூபாய்
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications