தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் கடந்த அமர்வின் முடிவில் அமெரிக்க டாலரின் மதிப்பானது சரிவில் காணப்படுகின்றது. இதன் காரணமாக கடந்த வாரத்தில் தங்கம் விலையானது சரிவிலேயே காணப்பட்டது. இந்த போக்கு வரும் வாரத்திலும் தொடருமா? இனியும் விலை குறையுமா? இந்த இடத்தில் வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலையானது இந்த வாரம் 1.45% சரிவினைக் கண்டுள்ளது. இந்த போக்கு இந்த வாரமும் தொடருமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து 3431 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.
இனியும் குறையுமா?
ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்பட்டாலும், இனியும் தங்கம் விலையானது குறையுமா? இன்னும் குறைந்த விலையில் அதனை வாங்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இந்த வாரத்தில் 1.68% சரிவினைக் கண்டுள்ளது. இது 1841 - 1809 என்ற லெவலுக்கு சரிவினைக் கண்டது.
வட்டியில்லா முதலீடு சரிவு
அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில் 105 என்ற லெவலை எட்டியுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 105.195 என்ற லெவலில் முடிவடைந்தது.
ஆக இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய காரணமாக அமைந்தது. இதற்கிடையில் தான் தங்கம் விலையும் சரிவில் காணப்பட்டது.
விலை குறையலாம்
கமாடிட்டி நிபுணர்கள் தங்கம் விலையானது முக்கிய சப்போர்ட் லெவல் ஆனது 1820 டாலர்களையும் உடைத்துள்ளது. இத அடுத்த உடனடி சப்போர்ட் ஸ்பாட் சந்தையில் 1785 முதல் 1780 ஆக இருக்கலாம்.
இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 55,500 ரூபாயினை எட்டலாம். இதன் அடுத்த உடனடி சப்போர்ட் விலை 54,500 ரூபாயாகும். இந்த லெவலையும் உடைத்து கீழாக சென்றால் 52,700 ரூபாயினை எட்டலாம்.
தங்கம் விலை குறையலாம்
தங்கம் விலையானது வரும் நாட்களில் குறைவதற்கான வாய்ப்புகள் என்பது அதிகம். ஏற்கனவே டாலரின் மதிப்பு அதிகரிப்பால், மற்ற நாணயதாரர்களுக்கு தங்கம் விலையானது விலை உயர்ந்ததாக காணப்படுகின்றது. ஆக வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கம் விலையில் இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வட்டியில்லா முதலீடு என்ற நிலையில் அழுத்தம் இருக்கலாம்.
வட்டி அதிகரிக்கும்
வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது மேற்கொண்டு அதிகரிக்கலாம். இதுவும் டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இதற்கிடையில் அமெரிக்காவின் 4வது காலாண்டு ஜிடிபி குறித்தான கணிப்பாது மேற்கொண்டு கீழாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆறுதலாக அமையலாம். மொத்தத்தில் நீண்டகால நோக்கில் சரியான வாய்ப்பாக அமையலாம்.
உக்ரைன் பிரச்சனை
எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது முக்கிய அம்சம் வாய்ந்த ஒன்றாக இருக்கலாம். இது தங்கம் விலைக்கு நீண்டகால் ஆதரவாக இருக்கலாம். இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். ஒரு வருடத்தினை கடந்தும் இன்றும் நீடித்து வரும் இப்பிரச்சனை, இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ? இது பொருளாதாரத்தில் இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்த போகிறதோ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முதலீடுகள் சரிவு
தொடர்ந்து அதிகரித்து வரும் டாலர் மதிப்பு, பத்திர சந்தைக்கு மத்தியில் தங்கத்தில் முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் மேற்கண்ட பல்வேறு காரணிகளும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். அதேசமயம் நீண்டகால நோக்கில் எந்த காரணிகளும் மாறவில்லை. தங்கத்திற்கு ஆதரவாக பலவும் உள்ளன. ஆக இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications